பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 2 நாவல்கள் 12. அவையாவன : அகல் விளக்கு, அந்தநாள், அல்லி, கரித்துண்டு, கள்ளோ காவியமோ, செந்தாமரை, நெஞ்சில் ஒரு முள், பாவை, பெற்ற மனம், மண்குடிசை, மலர்விழி, வாடாமலர்.

     சூழ்நிலை

எத்தகைய சூழ்நிலையில் டாக்டர் மு. வ. வின் நாவல்கள் தோன்றின என்பதை முதலில் சற்றே சிந்தித்தல் நலம். கொலை, கொள்ளை, மர்மம் ஆகிய விறு விறுப்பூட்டும் நிகழ்சிகளைக் கொண்ட ஆங்கில நாவல்கள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியாகிக்கொண்டு வந்தன. இவை எங்கும் காட்டுத்திபோல் பரவி பரபரப்புச் சூழலை உண்டாக்கிக் கொண்டிருந்தன. இதைத் தொடர்ந்து பரபரப் பூட்டும் கீழ்த்தர உணர்ச்சியைத் தூண்டும் மூன்றாந்தர நாவல்களும் வெளிவந்தன. ஆனால் விரைவிலேயே இந்த நாவல்களைப் படிப்பதில் தமிழ் மக்களுக்கிருந்த ஆர்வம் குன்றிவிட்டது. நம் நாகரிகச் சிறப்பையும், நம் நாட்டின் மண்ணின் மணத்தையும் விளக்கும் இந்தி, வங்க நாவல் களின் தமிழ் மொழிபெயர்ப்புக்களைப் படிப்பதில் அவர்களின் ஆர்வம் திரும்பியது. வடநாட்டு மொழிகளிலிருந்து பெயர்த்த நாவல்கள் தமிழ் நாட்டில் மலர்ந்தன. ஒரு பத்திரிகையில் இரவீந்திரர் நாவலும், வேறொரு பத்திரிகையில் பங்கிம் சந்திரர் நாவலும், மற்றொன்றில் சரத்சந்திரர் நாவலும் போட்டி போட்டுக் கொண்டு தொடர் கதைகளாக வெளிவந்தன. அவற்றைத் தமிழ்மக்கள் ஆர்வத்துடன் படித்து இன்புற்று வந்தனர். இந்த இன்பத்திற்கிடையே அவர்கள் மனத்திலே ஓர் ஏக்கம் தோன்றியது. அது தமிழின் நன்மைக்காக ஏற்பட்ட ஏக்கம் ஆகும். தமிழில் சிறந்த சிறு கதைகள் பத்திரிகைகளில் வெளி வந்தன. அவற்றை எழுதிய எழுத்தாளர்களைத் தமிழ்மக்கள் போற்றி மகிழ்ந்தனர். அதே சமயத்தில் தொடர்கதைகள் மட்டும் மொழி பெயர்ப்பாக இருந்தன. இந்த வேற்றுமை