பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

3

 3

யைத் தமிழ்மக்கள் உணரத் தொடங்கினர். சிறுகதையைச் சொந்தமாக எழுதிக் குவிக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்குத் தமிழில் நாவல் எழுதும் திறமை இல்லையா? கற்பனை வளம் இல்லையா? எவ்வளவு நாளைக்கு இரவல் இலக்கியத்தைப் படித்து இன்புறுவது ? இந்த எண்ணம் ஏக்கம் தமிழ் இலக்கிய அன்பர்களுக்கு உண்டாயிற்று. இந்த எண்ணம் சிறு காற்றாக உலவிப் புயலாக மோதியது. அதன் விளைவாகத் தமிழிலும் சொந்தமாக நாவல்கள் எழுதத் தமிழ் எழுத்தாளர்கள் முன் வந்தார்கள். அந்த முன்னோடி நாவலாசிரியர்களில் ஒருவர் டாக்டர் மு.வ.அவர்கள்.

விதிவிலக்கு

இந்த முன்னோடி நாவலாசிரியர்களுள்ளும் டாக்டர் மு.வ.அவர்களுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. தமிழில் வெளிவரத் தொடங்கிய ஆரம்ப நாவல்களில் பெரும்பாலானவை, பத்திரிகைகளில் தொடர் கதைகளாகவே வெளிவந்தன. இதற்குக் காரணம் புனைக்கதை வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தவை இன்றும் இருப்பவை.பத்திரிகைகளே. எழுத்தாளர்கள் மக்களிடையே அறிமுகம் ஆவதற்கும்,புகழும் விளம்பரமும் பெறுவதற்கும் இப்பத்திரிகைகளே இன்றியமையாத கருவியாக விளங்குகின்றன. தமிழ் நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர்கள் பத்திரிகைகளின் வாயிலாகவே வெளி உலகிற்குத் தெரிய வந்தனர்.

 பரிசுக்காகவும் பத்திரிகையில் தொடர்கதை வெளியிட வேண்டிய நிர்பந்தத்திற்காகவும் நாவல்களைப் படைக்கிறவர்களையே என்றும் எங்கும் காண்கிறோம். வேறு எந்த விதமான துண்டுதலும் இல்லாமல் படைப்புத்திறனைக் காட்டி நாவல் எழுதுகிறவர்கள் மிக மிகக் குறைவாகப் போய்விட்டார்கள்' என்று தமிழறிஞர்கள் வருந்துகின்ற நிலை தோன்றியது.

இதற்கு விதிவிலக்காக விளங்கியவர் டாக்டர் மு.வ. அவர்கள். பத்திரிகைகளின் பகட்டும் கவர்ச்சிகரமான விளம்