பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 4

பரமும் இன்றியே நாவல் எழுத்துலகில் காலூன்றி நிற்க முடியும் என்று மெய்ப்பித்துக் காட்டியவர் டாக்டர் மு.வ. அவர்களே ஆவார்கள்."இந்தப் பதினைந்து ஆண்டுகளாகத் தமிழ் நாட்டில் வெளி வந்த நாவல்களில் நூற்றுக்கு 90 விழுக்காடு தொடர்கதைகளாகவே வந்தவை. டாக்டர் மு.வ,போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கு.அவரைப் போன்ற மிகச் சிலரே நாவலைத் தனியே எழுதி முடிக்கிறார்கள்” என்று திரு.கி.வா. ஜகன்னாதன் அவர்கள் 'தமிழ் நாவலின் தோற்றமும் வளர்ச்சியும்"என்னும் தமது நூலில் பாராட்டி யுள்ளார்கள் என்றால் அதற்குக் காரணம் உண்டு. டாக்டர் மு.வ. எழுதிய நாவல்களில் பெரும்பாலானவை நேரடியாகவே நூல் வடிவம் பெற்றவை. 'பாவை’ என்ற நாவல் 'லோகோபகாரி'யிலும், "அந்தநாள்' என்ற நாவல் "தமிழ்முரசு' ஏட்டிலும் தொடர்கதைகளாக வெளிவந்தன. இவற்றையும் டாக்டர் மு.வ. தொடர்கதையாக எழுதவில்லை. முழு நூலாகவே எழுதி முடித்தார். இதழாசிரியர்கள் தங்கள் வசதிக்காக அவற்றைத் தொடர்கதைகளாக வெளியிட்டுக் கொண்டார்கள்.

அகத்தது காட்டும் நாவலாசிரியர்

நாவலாசிரியர்களைக் கடிகார முகப்பு நாவலாசிரியர்கள்” (Dial-plate Novelists) என்றும், அகத்தது காட்டும் நாவலாசிரியர்கள்  (Inner-working Novelists) என்றும் இருவகையாக அறிஞர்கள் பிரிப்பார்கள். வெளித்தோற்றங் களையும், ஆடையணிகளையும், சூழ்நிலைகளையும் மிகுதியாக வருணிப்பவர்கள் கடிகாரமுகப்பு நாவலாசிரியர்கள் ஆவார்கள். மனித மனத்தின் அலைகளையும் புயல்களையும் இன்பச் சுழிப்புக்களையும் வேதனைகளையும் மிகுதியாக வெளியிடுபவர்களே அகத்தது காட்டும் நாவலாசிரியர்கள் ஆவார்கள்: இவ்விரு வகை நாவலாசிரியர்களுள் டாக்டர் மு.வ. இரண்டாம் பிரிவைச் சேர்ந்தவர் என்று துணிவாகக் கூறலாம். அவருடைய செந்தாமரை' 'கள்ளோ காவியமோ?' என்ற