பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 5

நாவல்களில் வாழ்வின் செம்மையையும்,காதலின் மாண்பினையும்,பாத்திரங்களின் உள்ளப் போராட்டங்களையும், உணர்வின் எழுச்சி வீழ்ச்சிகளையும் அவர்கள் திறம்படச் சித்திரித்து உள்ளார்கள். தாய்மையின் ஆற்றலையும், தாய் உள்ளத்தின் வேதனைகளையும் வெளிப்படுத்துகிறது."பெற்ற மனம்". உணர்ச்சிக்கும் அறிவுக்கும் இடையே நடக்கும் இடையறாத போராட்டத்தை 'அகல் விளக்கு” சித்திரிக் கிறது. கலை உள்ளத்தை நுணுகி ஆராய்ந்து கூறுவதாகக் கரித்துண்டு' அமைந்துள்ளது. ஆண் பெண் உறவுச் சிக்கல் களையும், அதனால் குடும்பத்தில் உண்டாகும் குழப்பங்களையும் நுட்பமாகப் படம் பிடித்துக் காட்டும் வகையில் 'மலர்விழி' அல்லி', நெஞ்சில் ஒரு முள்' என்னும் நாவல்கள் விளங்குகின்றன. அவருடைய நாவல்கள் யாவும் படிப்போரின் நெஞ்சில் ஆயிரமாயிரம் சிந்தனைக் கிளர்ச்சிகளையும், வினாக் குறிகளையும் எழுப்பி அவர்களைத் துாண்டும் ஆற்றலுடையனவாகத் திகழ்கின்றன.மனிதப் பண்புகளையும்,மனித மனத்தின் ஆழ்ந்த இயல்புகளையும், உண்மைக் காதலையும், நுட்பமான உணர்ச்சிகளையும், அவை காட்டுகின்றன;நம் நாகரிகச் சிறப்பையும்,நம் நாட்டு மண்ணின் மனத்தையும் விளக்குகின்றன. அவருடைய படைப்புக்கள் அனைத்திலும் நல்ல குடும்ப வாழ்க்கையும் பண்பட்ட சமுதாயமும் உருவாக வேண்டுமென்ற விழுமிய நோக்கம் முனைப்பாகத் தெரிகிறது. அறன் வலியுறுத்தல் நோக்கில் எழுந்த நீதி நாவல்களாக அவை அமைந்துள்ளன. அவருடைய நாவல்களைப் படித்தால், ஒரு காவியத்தைப் படித்த பிறகு உண்டாகும் நிறைவு தோன்றுகிறது.செய்யுளில் அமைந்த காவியத்தைப் பொருள் அறிந்து படித்து இன்புறுவது எல்லோராலும் இயலாத காரியம். அதற்குத் தகுதியும் பயிற்சியும் வேண்டும். ஆனால் டாக்டர் மு.வ.வின் நாவல்களோ உரைநடையில் அமைந்த காவியங்களாக நமக்கு விளங்கும்.தெளிவான நடையில், இயல்பாக அலையோடும் அந்த நடையின் அழகோடு, மாசுமறுவற்ற கண்ணாடியில் காணும் காட்சிகளைப் போன்ற நிகழ்ச்சிகளோடு மகிழ்ச்சியை ஊட்டுகின்றன: