பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

7

கருதப்படுவதும், அரசின் பரிசு பெற்றதுமாகிய 'கள்ளோ காவியமோ' என்ற நாவலிலும் மங்கை, அருளப்பன் ஆகிய இருவருமே மாறிமாறிக் கதையைக் கூறுகிறார்கள், அல்லி' என்னும் நாவலில் சோமுவின் நாட்குறிப்பு வாயிலாகக் கதையை இயக்கிச் செல்கிறார்.நாட்குறிப்பும் ஒரு வகையில் அண்மைக் கூற்றாகவே அமைவதைக் காண்கிறோம்,

தன்மைக் கூற்றாக அமையும் நாவல்கள் அத்துணை சிறந்ததல்ல என்பது மேல் நாட்டு ஆசிரியர்கள் சிலரின் கருத்தாகும்
"கதையில் வரும் செயல்கள் நிகழ்ந்த காலத்தில் கதா பாத்திரங்களுக்கு இருந்த மனநிலைக்கும்,கதை முழுதும் நிகழ்ந்த பிறகு எல்லாவற்றையும் மீண்டும் நினைந்து சொல்லும் பிற்கால மன நிலைக்கும் வேறுபாடு இருக்கும். அப்போது நிகழ்ந்த உரையாடல்களை நினைவு கூர்ந்து எழுதுவதில் உண்மையை அவ்வப்போது சொல்லும் சுவை இராது. ஆதலின் இந்த முறை (தன்மைக் கூற்று முறை) ஆசிரியனே கதையினைச் சொல்வதாக உள்ள பாணியை விடச் சிறந்ததன்று' என்பது ஆனா லேக்டீசியா 

பார்போல்டு அவர்களது கூற்று ஆகும். ஆனால் இக்கூற்றை மேல் நாட்டு எழுத்தாளர்களே இன்று ஏற்றுக் கொள்வதில்லை.

 சுய சரிதை முறையில் நாவல்களை சுவைபட எழுதும் மாவலாசிரியர்கள் இப்பொழுது மிகுந்து விட்டார்கள். கதையைத் தன்மைக் கூற்றாகச் சொல்வதில் கதாபாத்திரங்கள் தம் அந்தரங்க உணர்வுகளையும் விருப்பங்களையும் தெளிவாக எடுத்துச் சொல்ல முடியும் என்பதை டாக்டர் மு. வ. செந்தாமரை”,“கள்ளோ காவியமோ',அல்லி' முதலான நாவல்களில் மெய்ப்பித்துள்ளார். கதாபாத்திரங்களிடம் குடி. கொண்டுள்ள மனிதப் பண்புகளையும், அவர்கள் உள்ளத்தின் ஆழ்ந்த இயல்புகளையும், உண்மைக் காதலையும் முட்பமான உணர்வுகளையும் சிறந்த முறையில் சித்திரிப்பதற்.