பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

தது ஒரு மனம். ஆடும் பறவைக்குச் சிறந்த போர்வையை விட்டுக் குளிரால் நடுங்கிச் செல்லத் துணிந்தது ஒரு மனம். இந்த நல்ல மனத்திற்குத் தன் இன்ப துன்பம் நினைவே இல்லை அல்லவா? காதல் இப்படிப்பட்ட நல்ல வெறி. தான் அன்பு கொண்ட துணைவியின் மனம் நோகத் தவறு செய்யாத பெருந்தகைமை காதல் நெஞ்சிற்கு உண்டு. அவள் இன்பம் அடையும் பொருட்டு அனைத்தும் துறக்கும் பேராண்மை காதல் நெஞ்சிற்கு உண்டு. அவள் துன்பத்தில் தானும் கலந்து கரைவதே பேரின்பம் என்னும் கொள்கை காதல் நெஞ்சிற்கு உண்டு. காதலர் தாய் மனம் உடையவர். ஒரு வர் மற்றவர்க்குக் குழந்தை. காதல் வாழ்வும் குழந்தை விளயாட்டே'.

இவ்வாறு மிக உயர்ந்த கருத்தை வெகு எளிதாக, நயமாக விளக்குகிருர் டாக்டர் மு. வ. தனியாகப் பார்க்கும் பொழுது இப்பகுதி நீண்டதாகத் தேன்றினாலும், அதை அவர் புகுத்தியிருக்கும் சூழலில் அதைப் படிக்கும் போதும், அப்பகுதியைப் பேசும் கதாபாத்திரத்தின் மிக உயர்ந்த குணச்சித்திரம் நம்முன் காட்சியளிக்கிறது. இவ்வுரை யாடல்களை நல்ல நடையில், அதைப்பேசும் பாத்திரங்களின் நிலைக்கு ஏற்ற நடையில், டாக்டர் மு. வ. அமைத்திருப் பதையும் நாம் காண்கிறோம்.

டாக்டர் மு. வ. தலைசிறந்த தமிழறிஞர். தமிழ் இலக்கியங்களையெல்லாம் ஆழ்ந்து கற்று அவற்றின் நயங்களில் தோய்ந்தவர். தமிழில் தங்குதடையின்றி அழகாக எழுதும் வன்மை நிரம்பியவர். எனவே அவருடைய தமிழ் நடையில் தமிழிலக்கியக் கருத்துகள் மின்னி மிளிர்வதைக் காண்கிறோம். கதையென்றால் நாவலென்றால் கொச்சைத்தமிழில் எழுதுவது தான் முறை என எண்ணிக்கொண்டிருந்த காலத்தில், இனிய, எளிய இலக்கிய நடையிலும் நாவல்களை எழுதலாம்; சாதாரண மக்களும் அவற்றை விரும்பிப் படிப்பார்கள் என உலகுக்குக் காட்டியவர் டாக்டர் மு.வ. அவர்களே என்றால் அது