பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தின் முடியாகத் திகழ்வது ஆகும். எனவே, இச்சிறப்பு கருதியே, 'குறவஞ்சி' என இந்நூல் அழைக்கப்பட்டது போலும். நூலின் இறுதியில் பாட்டுடைத் தலைவனின் சிறப்புக் கூறப்பட்டிருக்கும்.

குறவஞ்சி நூல்களிலே குறிப்பிடத்தக்கன, - "மீனாட்சி யம்மை குறம்", "கொடுமனார்க் குறவஞ்சி", "சரபேந்திர பூபாலக் குறவஞ்சி நாடகம்", "கும்பேசர் குறவஞ்சி நாடகம்", "அர்த்த நாரீசுவரக் குறவஞ்சி", "திருவாரூர்க் குறவஞ்சி", "திருக் குற்றாலக் குறவஞ்சி", "விராலிமலைக் குறவஞ்சி", "இராச மோகனக் குறவஞ்சி", "வாதசயக் குறவஞ்சி", "சிற்றம்பலக் குறவஞ்சி", "கண்ணப்பர் குறவஞ்சி", "கபாலீசுவரர் குறவஞ்சி", "இரகுநாதராய குறவஞ்சி", "செந்தில் குறவஞ்சி", "ஆதி முதலீசர் குறவஞ்சி", "தத்துவக் குறவஞ்சி", "ஞான ரத்தினக் குறவஞ்சி", "அழகர் குறவஞ்சி", "பெத்லகாம் குறவஞ்சி", "நகுலமலைக் குறவஞ்சி", "மண்ணிப் பாடிக்கரை திருநீலகண்டர் குறவஞ்சி", "வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி" முதலியனவாகும். ஆசிரியப்பா, வெண்பா, கலித்துறை, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம் முதலிய இயற்றமிழ்ச் செய்யுட்களுடன் சிந்து, புகழ்ப்பா, கண்ணிகள் போன்ற இசைப்பாடல்களும் விரவிவருமாறு குறவஞ்சி நூல்கள் பாடப் பெறும். "சோழக் குறவஞ்சி", "விதுரன் குறம்" போன்ற பழமையான குறவஞ்சி நூல்கள் இன்று நமக்குக் கிடைக்கவில்லை.

குறவஞ்சிப் புலவர் பிற்காலத்தில் எழுந்த குறவஞ்சி நூல்களில் காலத்தால் முற்பட்டது தித்திக்கும் தீந்தமிழால் ஆன "திருக்குற்றாலக் குறவஞ்சி"ஆகும். அத்துடன் அது, தனக்குப் பின்னர் தோன்றிய குறவஞ்சிகளுக்கு வழிகாட்டியாகவும் விளங்கு கின்றது. இத்தகைய சிறப்பு மிக்க குற்றாலக் குறவஞ்சியின் நூலாசிரியர் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி