பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

மொழி மாலை". "திருக்குற்றாலக் கோமளமாலை", "திருக்குற்றால வெண்பா அந்தாதி", “திருக்குற்றாலப் பிள்ளைத் தமிழ்", "திருக்குற்றால நன்னகர் வெண்பா", "திருக்குற்றாலக் குறவஞ்சி' ஆகிய பதினான்கு மணியாரங்களைச் செய்து அவ் விறைவர்க்குச் சூட்டி மகிழ்ந்தார். இவற்றுள்ளே, வம்பார் குன்றந் நீடுயர் சாரல் வளர் வேங்கைக் கொம்பார் சோலைக் கோல வண்டியாழ் செய் குற்றால" நாதராகிய திரிசடை திகழ் திரிகூட நாதரைத் தலைவராகக் கொண்டு பாடப்பெற்ற திருக்குற்றாலக் குறவஞ்சி, சொல்லழகும், பொருளழகும், கருத்தாழமும், ஒலி நயமும், உவமைச் சிறப்பும், இனிய எளிய நடையும், அத்துடன் நயமும்கொண்டு இலங்குவதோடு குறிஞ்சிநிலக் குன்றா அழகைக் குறையாது கூறும் குறவஞ்சி நூலாகும். எனவே இப்புலவரை 'குறவஞ்சிப் புலவர்' என்று கூறுவது முற்றிலும் பொருத்தமாகும். இனி அந்நூலின் துணைகொண்டு குறவஞ்சிப் புலவர்தம் பாடத் திறனை நாம் காண்போம். கனியெலாம் சிவலிங்கம் நூலின் முதலில் காணும் பகுதி தற்சிறப்புப் பாயிரம் ஆகும். அப்பகுதியில் பாட்டுடைத் தலைவராகிய திரிகூட நாதரை ஆசிரியர் நமக்கெல்லாம் அறிமுகப்படுத்தும் முறை மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. திரிகூடநாதர் குறும்பலா ஈசர் என நாம் முன்பு கண்டோம். அவரது வடிவம் சிவலிங்க வடிவமாகும். அவர் உறையும் இடம் பலா மரத் தடி, குற்றால இடத்தின் மரம் (தலவிருட்சம்) பலாவாகும். பருவத்தில் பலா மரங்கள், பச்சை நிறக் காய்களோடு, பசு மஞ்சள் நிறக்கனிகளோடு காட்சி தருவது நமது கண்களுக்குப் பெருவிருந்தாகும். மேலும் பலா மரங்களின் கிளைகளில் காணும் வளரெல்லாம் காய்களும் கனிகளும் காணப் பெறுவது நமக்கு பெருவியப்பையே தரும். எனவே குறவஞ்சி ஆசிரியரது கண்ணையும் கருத்தையும் இக்காட்சி ஈர்க்காமல் இருக்குமா? அவரும் இக்காட்சியைக் கண்டார்.