பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 23 எண்ணுவதைப் போல், இயற்கையாக இறைவனை, தலைவனை நமக்கு அறிமுகப்படுத்துதல் மிகவும் சுவை நடப்பதாக உள்ளது. அது வருமாறு : "புரிநூலின் மார்பனிவன்

அயனென்பார் அயனாகில்
    பொங்கரவ மேது தனிச் சங்கம்ஏ தென்பார்

விரிகருனை மாலென்பார் மாலாகில் விழியின் மேல்

    விழியுண்டோ முடியின் மேல் முடியுண்டோ என்பார்

இருபாலும் நான்முகனுந் திருமாலும் வருகையால்

    ஈசனிவன் திரிகூட ராசனே யென்பார்."

அத்துடன் ஆசிரியர் நிற்கவில்லை. மானினம் வருவதைப் போன்றும், மயில் இனம் திரிவதைப் போன்றும், வானில் மீனினம் மிளிர்வதைப் போன்றும், மின்னல் கூட்டம் ஒளிர் வதைப் போன்றும், தேன் இனமாகிய வண்டுக் கூட்டம் ஒலித்து ஆரவாரம் செய்தலைப் போன்றும் கால்களில் அணிந்த லெம்புகள் ஒலிக்கும்படி, எங்கும் தலையில் மலர்சூடிய மங்கை நல்லார் உலா வருகின்ற தலைவனது அழகைப் பருகுவதற்காக விரைந்து கூடினார்கள். தலைவன் அவர்களுக்கு மயக்கத்தைத் தரும் அழகுடையவனாக விளங்கியமையால் அவர்கள் வியர்த்து, உடல் தளர்ந்து, உயிர் விம்மி, கருத்தழிந்து நின்றார்கள். ஒரு சிலர், ஒரு கையில் வளையணிந்து, மற்றொரு கையில் வளையணிய மறந்து உலாக்கான ஓடி வந்தனர். இதனைக் கண்டு ஒரு சிலர் நகைக்க, அவர்கள் நாணி நின்றவர். ஒரு சிலர், மயக்கத்தின் காரணமாக மார்பில் அணிகின்ற கச்சினை ஆடையென இடுப்பில் அணிந்து, பின்னர் மயக்கம் தெளிந்து அதனைத் தங்கள் மார்பிற்கு அணிவார்கள். மற்றுஞ்சிலர், ஒரு கண்ணுக்கு மைதீட்ட, மையை எடுத்துள்ள கையுமாக, ஒகு கண்ணுக்கு எழுதிய மை கொண்ட கண்ணுமாக விரைந்தோடி வந்தனர். பலர், 'நம் உள்ளத்தையெல்லாம் கொள்ளை கொண்ட இவன் நெடுநேரம் நிற்க மாட்டானோ ? ஒரு சொல் கூற மாட்டானோ ?’ என்று ஏங்கித் தவித்தனர். இக்காட்சிகளை யெல்லாம்,