பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 26 மேலும் அவள் வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த மேனியை உடையவள். வீமனால் செய்யப்படும் உணவு போல் சுவை மிக்க இன்பப் பாலுக்கு இனிமை ஊட்டும் சீனியைப் போன்றவள்; மனம் பொருந்திய வல்லிக் கொடியை ஒத்தவள். அத்துடன் திரிகூடராசர் உள்ளக் தினையும் உருக்கும் உருவமும் ஒளியும் உடையவள். இதனை நூலாசிரியர்,

  • வெடித்த கடலமுதை எடுத்து வடிவு செய்த

மேனியாள் வீமப் பாகம் பெற்ற காமப் பாலுக்கொத்த சீனியாள் பிடித்த சுகந்தவல்லிக் கொடிப்போல் வசந்தவல்லி பெருக்கமே சத்தி பீட வாசர்திரி கூட ராசர்சித்தம் உருக்குமே' என்று இன்னோசை பொருந்த இனிமையுறப் பாடியுள்ளார்: அடுத்து அழகு மங்கையாகிய வசந்த வல்லி அழகிய பந்தைக் கையிற் கொண்டு பந்தாடி நின்றாள். தாவுகின்ற விளையாட்டினாலோ அன்றி மார்பின் பளுவினாலோ, சங்கு வளையல்களை அணிந்துள்ள தனது கைகள் மிகுதியாகச் சிவந்து விளங்கும்படி, நாலடி முன்னே ஓங்கிப் பத்தடி பின்னே வாங்கிப் பந்தடித்து விளையாடினாள். அக்காட்சியினைத் தன் கற்பனையிலே கண்ட கவிராயர் அதனை நமக்கு சிறந்ததொரு படமாக்கிக் காட்டியுள்ளார். அப்படக் காட்சியினை நாமும் காணலாம். செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயர் என்றாட இடை சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட இரு