பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31 யுள்ளார். அப்பாடல்களைப் படிக்குங்கால் குறவஞ்சி நேரில் தோன்றி நிற்பதுபோன்ற உணர்வையே படிப்போர் நுவர். குற்றாலக் குறவஞ்சி, குற்றாலநாதரது திருவருளைப் பாடிக் கொண்டு, திருநீற்றை நெற்றியில் அணிந்து, அத்துடன் பொட்டும் இட்டு, சிறந்த பாசி மணி மாலையும், குன்றி மணிமாலையும் அணிந்து, வெண்ணிற ஆடை பொருந்திய இடுப்பில் தாங்கியிருக்கின்ற கூடையும், வலது கையில் பிடித் திருக்கின்ற குறி சொல்லும் மாத்திரைக் கோலும் கொண்டு, பசப்பும், குலுக்கும், கண் சிமிட்டும், பகட்டும் உடையவளாக, ஊர்வசி, அரம்பை ஆகியோரது செருக்கு அடங்கவும், தன் புன்சிரிப்பின் குறும்பால் முனிவர்களும் அடங்கவும், பேச்சுத் திறத்தால் அவையெலாம் அடங்கவும், வான் வழியாயாச் செல்லுகின்ற சித்தர்களும் தன் கடைக்கண்பார்வையால் அடங்கவும் மற்றோர் அழகோவியமாகத் தோன்றினா ள். இதோ! அவ்வோவியம் : . ஆவளர் செண்பகக் காவளர் தம் பிரான் தேவர்கள் தம்பிரான் திருவருள் பாடி இலகுநீ றணிந்து திலகமும் எழுதிக் குல மணிப் பாசியும் குன்றியும் புனைந்து சலவைசேர் மருங்கிற் சாத்திய கூடையும் வலதுகைப் பிடித்த மாத்திரைக் கோலும் மொழிக்கொரு பசப்பும் ... கொரு குலுக்கும் விழிக்கொரு சிமிட்டும் வெளிக்கொரு பகட்டுமாய் உருவசி அரம்பை கருவமும் அடங்க முறுவலின் குறும்பால் முனிவரும் அடங்கச் சமனிக்கும் உரையாற் சபையெலாம் அடங்கக் கமனிக்கு மவரும் கடைக்கணால் அடங்க..." அவளது குறி சொல்லும் திறமையைப் பற்றிக் கூறவந்த ஆசிரியர், ஆண்களுக்கு அவர்களது வலது