பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 கை பார்த்தும், பெண்களுக்கு அவர்களது இடது கை பார்த்தும், சென்ற காலத்தின் குறி, தற்போது பலிக்கும் குறி, இனிமேல் வரும் குறி, வேண்டுவார் மனக் குறி, உடற் குறி, கைக் குறி, விழிக் குறி, சொற்குறி இவற்றில் எந்தக் குறியான போதிலும் இமைப் பொழுதில் உரைக்கும் திறம் அவளிடம் உண்டு என்று பாராட்டுகின்றார். மற்றொரு பகுதி குறத்தி மலை வளம் கூறும் பகுதியாகும், தமிழின் இனிமையை, சுவையை இசையை, நாம் இப்பகுதியைப் படிக்குங்கால் நன்கு உணர முடியும். எல்லா வளங்களு முடைய திருக்குற்ருறாலமெனப் படும் திரிகூட மலை குறவஞ்சி வாழும் மலையாகும். அங்கு, ஆண் குரங்குகள் கனிகளைப் பறித்துப் பெண் குரங்குகளுக்குக் கொடுத்து மகிழும். அக் குரங்குகளால் சிதறி எறியப்படு கின்ற கனிகளுக்காக வானுலகில் வாழும் தேவர்கள் கெஞ்சி நிற்பர். கானவர்கள் வானவரை தம் விழிகளால் அழைப்பர் வானின் வழியாகச் செல்லும் சித்தர்கள் கீழிறங்கி வந்து காயசித்தி மூலிகைகளை இங்கு வளர்ப்பார்கள். தேனருவித் திரையெழும்பி வானின் வழி:ஒழுகும். அதனுல் ஞாயி III, றின் தேரை இழுத்துச் செல்லும் குதிரைக் கால்கள் வழுக்கி விழும். அத்துடன் தேர்க் காலும் வழுகும். இதனை ஆசிரியர், வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் மந்திசிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் கானவர்கள் விழி எறிந்து வானவரை அழைப்பார் கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர் தேனருவித் திரையெழும்பி வானின் வழி ஒழுகும் செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும் கூனலிளம் பிறைமுடித்த வேனிஅலங்காரர் குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே’’ எனப் பேசுகிறார்.