பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 33

  இந்தியாவும் விடுத2லயும்

இருபதாம் நூற்றாண்டு ஓர் எழில் மிக்க காலம்; தமிழ் - உரை நடையில் புதுமை பல புகுந்த காலம்; மாற்றம் பல விளைந்த காலம்; வளர்ச்சி ஏற்பட்ட காலம். இக்காலத்திலே காளி மறைமலையடிகள் பிறமொழிச் சொற்களை விலக்கித் தூய செந்தமிழ்ச் சொற்களை உரைநடையிற் புகுத்தினார். உரைநடை களங்கமற்ற முழுநில வெனப் பொலிந்தது. அடுத்து திரு. வி. க. வந்தார். மேடைகளில் அழகுத் தமிழில் முழங்கினார். அத்துடன் தனது தமிழ் முழக்கத்தை உரைநடையில் புகுத்தினார். அதாவது உரை நடையிலே - எழுத்து நடையிலே - பேச்சுப் புகுந்தது.எனவே தமிழிலே முழுக்க முழுக்கப் பேச்சாகவே அமைந்த உரைநடை, புத்தம் புதிதாகத் தோன்றியது. தமிழன்னை . தாம் ஒன்றைப் பெற்றாள். அதனைத் தன் முத்தாரங் கருக்கிடையே அவள் அணிந்து கொண்டாள். திரு. வி. க. வின் உரைநடையை ஆங்கிலேயர் கானின், அப்பேச்சு உரைநடை (Spoken Prose) என்று பாராட்டு வர்) இதனை முதன் முதலில் தமிழில் ஏற்படுத்திய பெருமை திரு. வி. க. அவர்களேயே சாரும். 'இந்தியாவும் விடுதலையும்" என்பது திரு. வி. க. அவர் ந மக்கு அளித்துச் சென்றுள்ள அரிய நூல்களில் ஒன்றாகும். அந்நூலினை உரைகல்லாகக் கொண்டு அவர்தம் உரை கடைச் சிறப்பினை அறிவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். இந்தியாவும் விடுதலையும்’ என்ற நூல் முழுதும் உணர்ச்சியும் உரமும் ஊட்டும் உரையாகவே, பேச்சாகவே காணப்படுகிறது. எனவே இதனை நாம் படிக்குங்கால் திரு. மா. க. அவர்ளே நம் முன் வந்து அழகுத் தமிழில் பேசுவது போல தோன்றும். திரு. வி. க. அவர்களுக்கு முன்னரும் மு.வ.3