பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 37 மாந்தனது கூடி வாழும் இயல்பு வாழ்க்கையாக விரிகிறது; குடும்பமாக விரிகிறது; சிற்றூறாக விரிகிறது; நாடாக விரிகிறது; உலகமாக விரிகிறது.” நீண்ட சொற்றொடர்கள் ஓரிரு இடங்களில்தான் காணப்படுகின்றன. அதுவும் முடிவுரையில்தான் காணப்படு கின்றன. ஓர் எடுத்துக்காட்டு வருமாறு : இந்நூலில் மூவகை இந்தியாவும் மூவகை நாடும் பேசப்பட்டுள்ளன; முற்கால இந்தியாவும், இடைக்கால இந்தியாவும், இந்து நாடும் மகம்மதிய நாடும் எப்படி வளர்ந்து தேய்ந்தன என்பதும், இக்கால இந்தியாவில் எக்கட்சி வழங்குகிறது என்பதும், இந்தியாவில் ஆங்கில ஆட்சி எவ்வாறு நுழைந்தது என்பதும் விரித்துரைக்கப் பட்டிருக்கின்றன.” இங்கே என்பதும்' என்ற சொல், என்பதூஉம்' பகன் திரிபாம். இந்தச் சொல்லைக் கண்டதும் நம் நினைவில் | இளம்பூரணரின் முறைமை சிறத்தலாவது: யாதானும் ஒரு செய்யுட்பண் முதற் பொருளும் கருப்பொருளும் உரிப்பொருளும் வரின்,முதற்பொருளால் திணையாகும் என்பதுாஉம், ஏனைய இரண்டும் வரின் கருப் பொருளால் திணையாகும் என் பதூஉம், உரிப்பொருள் தானே வரின் அதனால் திணை பகம் என்பதூஉம் ஆம்’ என்ற பகுதி நம் நினைவிற்கு வரும் அத்துடன் ,அரசியல் பிழைத்தோர்க் கறங்கூற் றாவதூஉம் உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும் ஊழ்வினை யுருத்துவந் தூட்டு மென்பதூம்” என்ற சிலப்பதிகார வரிகளும் நினேவிற்கு வராமல் போகா. நூல் முழுவதும் பேச்சு நடைதான் அமைந்துள்ளது எனினும், சிற்சில இடங்களில் பேச்சு நடையும், இனிய சுவை