பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 யும், உணர்ச்சி வெள்ளமும், விரைவும் கொண்டு உள்ளத்தைக் கவருகின்றது. "இளைஞர்களே! தாயின் விடுதலையைக் குறிக்கொண்டு எழுங்கள்; அஞ்சா நெஞ்சுடன் எழுங்கள்; கலப்பு மண உள்ளங்கொண்டு எழுங்கள்; திரளுங்கள்; படைகளாகத் திரளுங்கள்; திரண்டு எழுங்கள்; சாதிப் பேய் தலைவிரிந்து ஒடும்; சாதிப் பேயை ஓட்டுத்திறன், ஆற்றல், வல்லமை உங்களிடத்திலிருக்கிறது; மனம் வேண்டும்; மனம் கொள்ளுங்கள்.' இதனைப் படிக்கும்பொழுது திரு. வி. க. வே. நம்முன் தோன்றி முழக்கமிடுவது போலத் தோன்றவில்லையா? இகன் மூலம் அவர் உள்ளம் நன்கு புலப்படுகிறதன்ரறோ ? இக்காலச் சொற்றொடர்களிலே தல்லீற்றுத் தொழி. பெயர்ச் சொற்களிலே பெரும்பாலும் தல்" என்ற விரு . வருதல் இல்லே, ஆல்ை திரு. வி. க. அவர்களது சொற்ருெட களிலே "தல்' ஈறு இன்றிப் பெரும்பாலும் தொழிற் பெயர் சொற்கள் வரா; ஓர் எடுத்துக்காட்டு வருமாறு : ஆதலின்,உண்மை இதுதான் என்று அறுதியிட்டுக்கடிதல் இயலாது....... அவர்களிடை காங்கிரஸ் கொள்கையில் சிறு மாறுதல் நிகழ்தல் வேண்டுமென்ற வேட்கை எழுந்தது.” சொற்கள் "இதில் திசைச் சொற்கள் சிலவும், வடநாட்டு: பெயர்கள் சிலவும், இன்ன பிறவும் உலகிடை மருவி வழங்கும் முறையிலேயே பெய்யப் பட்டுள்ளன' என்று திரு. வி. க. அவர்களே தம் முன்னுரையில் கூறியுள்ளார். அவர் கையாண்டுள்ள பிறமொழிச் சொற்களில் பெரும்பாலானவை இடுகுறிப் பெயர்களாகும். அஃதாவது தனிப்பட்டவர்களின்