பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 39 பெயர்களாகும். ஆங்கிலேயர் பெயர்களை அவ்வாறுதான் - குறிப்பிட முடியும். ஆனால் அவற்றைக் குறிப்பிடுகையில் பரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தி இருக்க வேண்டா. அவா மற்றும் சில சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றுள் சில வருமாறு : அஹிம்சை, சூந்யம், பிராணி, அந்நியம் தர்மம், பிரசாரம், ஜீரண.இராஜ்யம், சாம்ராஜ்யம், சத்ராதிபதி, ஜில்லா, இராஜப்பிரதிநிதி, சுதேசி, விதேசி, ஜனங்கள், உத்யோகஸ்தன், பிரதிஷ்டை, அநாவசியம், பாராயனம், வர்க்கம், சுராஜ்யம், பகிஷ்காரம். இவற்றுள் பிற சொற்களுக்குத் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தியிருக்கலாம். அல்லது தமிழ்ச் சொற்கள் கிடைக்காவிடின், தமிழாக்கமாவது செய்திருக்க கலாம். ஆனால் பிறமொழிச் சொற்கள் இருப்பதால் நூலின் பெருமைக்குக் குறை எதுவும் ஏற்படவில்லை. ஆயினும், இத்தகைய சொற்கள், தவிர்க்கப் பெற்றிருந்தால் நூல் தூய்மையும் தனிச் சிறப்பும் பெற்றிருக்கும். நானூறு பக்கங்களுக்கு மேலே உள்ள் ஒரு நூலில், அதுவும், வடமொழி தமிழின் தாய்' என்று சொல்லப்பட்ட காலத்தில் அறுபது வடசொற்கள் கலந்தமை வியப்பன்று: இவை தவிர, ஏனைய சொற்கள் எல்லாம் தூய செந்தமிழ்ச் சொற்கள்; உயிருடைய சொற்கள்; உணர்வூட்டும் சொற்கள்: ஒளியுடைய சொற்கள்; சுவையொழுகும் சொற்கள்: 'அகக்கண்ணர், குடிக்கோனாட்சி' என்பன போன்ற மொழி பெயர்ப்புச் சொற்கள் கூட சுவைமிக்குத் தோன்றுகின்றன.

  பலவகை உரைநடைகள்

முன்னர்க் கூறியபடி, நூல் முழுவதும் பேச்சுநடைகள் அமைந்துள்ளது என்றாலும், நூலாசிரியர் வேறு உரை நூல்களையும் கையாளாமல் இல்லை. நூலின்கண் ஆசிரியர் பல கருத்துகளை வற்புறுத்துகிறார். அவர் வற்புறுத்தும் கருத்துக்களுள் பழமையின் உயிர்ப்பே புதுமையை வளர்க்க வல்லது என்பதாகும். அதனை