பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40 நிறுவ ஆசிரியர் வினாவும் விடையுமாகக் கூறி வழக்காடி இறுதியிலே தங்கோள் நிறுவுகிறார். இத்தகைய இடங்களில் அவர் கையாண்டுள்ள நடை, வழக்காடு நடையாகும் (Argumentative Prose). - புதுமை இளைஞரே ! புதுமை எது ? புதுமைக்குத் தோற்றுவாய் உண்டா? இல்லையா ? புதுமை வெறும் பாழினின்றும்.சூந்யத்தினின்றும் தோன்றுமா? தாயின்றிச் சேய் பிறக்குமா ? வித்தின்றி முளை உண்டாகுமா ? ஓர்க. பழமையின்றிப் புதுமை இல்லை. புதுமைக்குத் தாய் பழமையே. புதுமையின் ஆக்கத்துக்கு ஊக்கமூட்டுவதும் பழமையே. பழமையின் உயிர்ப்பே புதுமையை வளர்க்க வல்லது. பழமையற்ற நாடும் சமூகமும் பிறவும் விரைவில் எளிதில் புத்துணர்வு பெறுதல் அரிது...... கண்ணகி நின்ற இடம் இது-மணிமேகலை சிறைப்பட்ட இடம் அது என்று அறிஞர் உணர்த்தும் போது உள்ளக் கவர்ச்சியும், கிளர்ச்சியும் உறுகின்றனவா? இல்லையா? இன்றைக்கு ஐயாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் நமது நாடு பாபிலோனுடன் வாணிகஞ், செய்தது என்றும்,இன்றைக்கு நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்தியப் பிணங்கட்கு நமது நாட்டு மெல்லிய துணிகள் புனையப்பட்டன என்றும் பழைய வரலாறு சாற்றுவதை உணரும்போது நமக்குள் உணர்ச்சி எழுந்து ததும்பி வழிகிறதா இல்லையா?... அனுபவத்திற் பார்க்கும், இம் மன்னன் இப்படி நடந்ததால் தீமை விளைந்தது என்றும் அம்மன்னன் அப்படி நடந்ததால் தீமை விளைந்தது என்றும் பழைய வரலாறு சொல்லுகிறது? அக்குறிப்புக்கள் ஒருவனது வாழ்வுக்குத்துணை செய்யுமா? செய்யாவா? ஆராய்க." மேற்கூறிய பகுதியினை நாம் படிப்போமாயின், இறுதியிலே, பழமை பல வழியிலும் வேண்டற் பாலதே ’’ என்ற