பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 41 திரு. வி. க. அவர்களின் கருத்தை ஏற்றுக் கொள்வோம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதற்குக் காரணம் வழிக்காடு நடையின் ஆற்றலே ஆகும். அஃதாவது வழக்காடு நடை படிப்போரது உள்ளத்தை ஈர்ப்பது ஆகும். நூலாசிரியருடைய கருத்தைப் படிப்போர் ஏற்றுக் கொள்ளச் செய்வது இவரது தனித்த ஆற்றலாகும். அத்துடன் நூலாசிரியருடைய கருத்தைச் சிறந்த உண்மை என்று படிப்போர் உவந்து போற்றி மகிழும்படித் தூண்டும். அதற்குக் காரண காரியச் செயல்முறைகளைக்காட்டி, தம்முடைய கருத்துக்களே .ஆரிரியர் கூறுவதற்கு இந்நடை வழிவகுப்பது ஆகும். இக் கருத்தினை நாம்,

   "The function of argumentative prose is to pursuade the reader to believe something. Good argumentative prose

tains sound reasoning and may also include an appeal to emotion" என்ற ஆங்கில உரைப் பகுதியால் அறியலாம்.

   நூலின் ஒரு சில இடங்களில் நாம் வருனனை அல்லது விளக்கமான நடையினைக் (Descriptive Prose) காண்கிறோம். நாடு, குடும்பம், சிற்றுார் ஆகியவை பற்றி அவர் கூறுங்கால் வருணனை உரைநடையினயே கையாண்டுள்ளார். அதற்குக் கீழேக் காணும் பகுதியினைச் சான்றாகக் காட்டலாம் :
  • தலைவர் தடை கிளத்தினுர், திலகர் தடைக்கு அடங்கவில்லை. 'அகலேன்' என்று மகாராஷ்டிரச் சிங்கம் சர்ச்சித்தது. அதிர்ந்தது பந்தர்; வீசியது சூறாவளி: பொங்கியது கடல்; மோதின. அலைகள் சுழன்றன தடி கள்; எழும்பின செருப்புகள்; பறந்தன நாற்காலிகள்: ஒரே குழப்பம்; திலகர் சிலைபோல் நின்றார். தலைவரால் ஒன்றுஞ் செய்தற்கில்லை."

இடைக்கால இந்தியா, தற்கால இந்தி யா, அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று இயல்களிலே இந்திய நாட்டு