பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

43 வுண்மையினைப் பின்வரும் எடுத்துக்காட்டுப் பகுதியால். அறியலாம் :

முசுலீம் அல்லாதார்க்கென்று பிறப்பிக்கப் பெற்ற சட்டங்கள் எல்லாம் அக்பரால் ஒழிக்கப்பட்டன: அவரால் குழந்தை மனம் விலக்கப்பட்டது; கைம்மை யார் கொடுமை ஒருவாறு அகற்றப்பட்டது; கட்டாய உடன்கட்டையேறுதல் நிறுத்தப்பட்டது: அடிமை முறை அழிக்கப்பட்டது.'

ஒரு சில இடங்களில் அவர் உணர்பொருள் நடையினையும் (Abstract Prose) கையாண்டுள்ளார். அதற்கோர் எடுத்துக்காட்டு :

  • தத்துவம் என்பது மாயா காரிய்ம். மாயையே இயற்கை இயற்கை இறைவனது உடல்-போர்வை. இறைவனுக்கு இருவகை நிலையுண்டு. ஒன்று இயற்கையை உடலாகக் கொண்டது; மற்றொன்று இயற்கையைக் கடந்து நிற்பது. இயற்கையின் கூறுகளாகிய தத்துவங்கள் முப்பத்தாறு. இசை நாதத்தின் வாயிலாக எல்லாத் தத்துவங்களிலும் கலந்து நிற்பது அவ்வத் தத்துவத்தில் நின்று இசை எழும்போது, அஃது அவ்வத் தத்துவ சொரூபமாகவே பயன் விளைக்கும். அதன் சுய சொரூபம் நாதத்திலேயே விளங்கும். நாதம் வரை சென்ற மக்களே இசையின் முழு நுட்ப முணர்ந்த வர்களாவார்கள்."

நூலாசிரியர் உணர்பொருள் உரை நடையைக் கையாண் டிருப்பது போலவே பருப்பொருள் உரை நடையினையும் (concrete Prose) கையாளாமல் இல்லை. ஓர் எடுத்துக்காட்டு வருமாறு :

  • ஒவ்வொரு வீட்டின் புறக் கடையில் நெல்லி, அத்தி, விளா, முருங்கை...... முதலிய மரங்கள் பொலிந்து கொண்டிருக்கும்; காய்கறிச் செடிகள்