பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 வைக்கப்பட்டிருக்கும்; முன் புறத்தில் ஆல், அரசு வேம்பு முதலிய மரங்கள் நிழல் செய்யும்; தெருக்கள் அழகாக அமைக்கப்பட்டிருக்கும்.”

   பத்தி பிரித்தல்

உரைநடையைப் படிப்பதிலே வெறுப்புத் தோன்றாதிருக்க, சொற்றொடர்களும், பத்திப் பிரிப்புகளும் செவ்வனே அமைதல் வேண்டும். எல்லாமே சிறு பத்திகளாய் இருப்பினும், பெரிய பத்திகளாய் இருப்பினும் சலிப்புத்தட்டி விடும். இரண்டும் கலந்து வரல் வேண்டும். அப்பொழுதான் படிப்போர்க்கு அலுப்புத் தட்டாது. மேலும் படிக்க, விருப்பம் எழுந்து கொண்டு இருக்கும். பத்தி பிரித்து எழுதுவதிலே திரு. வி. க. அவர்கள் தமக்கெனத் தனிமுறை ஒன்றைக் கைக்கொண்டுள்ளார். சாதிக் கொடுமை ஒரு பக்கம்! சம்பிரதாயக் கொடுமை இன்னொரு பக்கம்! சாமியார் கொடுமை மற்றொரு பக்கம்! பாரதமாதா எரிகிறாள்."

 இஃது ஒரு பத்தி.
 இந்தியாவில் பழைய மலைகள் சில நிற்கின்றன. அவற்றுட் சிறந்தன. இமயம், விந்தியம், பொதிகை. இமயம் கடலிடை மூழ்கிக் கிடந்ததை விந்தியமும், பொதிகையுங் கண்ட காலமுண்டு. அவ்வம் மலைப் பாறைகளின் வயதை ஆராய்ந்தால் அதனதன் தொன்மை நனி விளங்கும். விளக்கம் நில நூற்களிற் காண்க."

இஃது ஒரு பத்தி. மேற்கூறிய இரண்டு பத்திகளையும் பார்க்கப் பார்க்க. திரு. வி. க. அவர்களது சிறந்த பத்தி அமைப்பு முறையினை நாம் நன்கு உணரலாம். முதற் பத்தி முன்னுள்ள கருத்துக்களின் தொகுப்பாய் இலங்குகின்றது. இரண்டாவது பத்தி