பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 4. காப்பியத் தமிழ்

   காப்பியச் சிறப்பு

காலம் மாற மாற மக்களுடைய கருத்துக்கள் மாறும். எண்ணங்கள் மாறும்; அவர்தம் அறிவும் வளர்ச்சி பெறும். அதுபோல இலக்கியங்களும் காலத்திற்கேற்ற முறையில் மாறிப் பிறக்கும். ஒரு காலத்திலே கவிதைக்கு அதிக மதிப்பு இருந்தது. ஆனால் இன்றோ கவிதையைவிட உரை நடைக்கு அதிக வரவேற் பளிக்கப்படுகிறது. உரைநடை நூல்கள் ஆயிரக்கணக்காகப் பெருகி வருகின்றன. இது காலத்தினால் ஏற்படும் கருத்து மாற்றம் ஆகும். சங்க காலத்திலே தனிப் பாடல்களுக்கு அதிக மதிப்பு! இருந்தது. அஃதாவது சங்ககால மக்கள் மலரை மட்டும் தனித்தனியே வைத்துக் கொண்டு நுகர்ந்து நுகர்ந்து மகிழ்ந்தனர். ஆனால் சங்க காலத்திற்குப்பின் மக்களுடைய எண்ணப்போக்கு வேறுவிதமாக வளரலாயிற்று. மலரை நுகர்வதோடு அவர்களது உள்ளம் அமையவில்லை. மலர்கள் பல கொண்டும் மாலையாக்கி மகிழ விரும்பினர். சங்ககால மக்கள் தனி மாலையாக நுகர்ந்தனர். எனவே தனிப் பாடல்களைப் பாடினர். பிற்கால மக்கள் மாலையைப் பெரிதும் விரும்பினர். எனவே பல காப்பியங்கள் எழுந்தன. ஒரு மொழியின் செழுமைக்குக் காரணமாக அமைந்தவை இலக்கியங்களாகும். இலக்கியங்களுள்ளும் காப்பியங்களே மொழியின் வளத்தைத் தெளிவாகக் காட்டுவனவாகும். உயர் தனிச் செம்மொழிகள் என அழைக்கப்படுகின்ற மொழி களுக்குள்ள பெருமையெல்லாம் அந்த மொழிகளிலுள்ள பெருங்காப்பியங்களால்தான் என்பது நாமறிந்ததொன்றே. இலத்தின், கிரீக், சீனம், தமிழ், வடமொழி ஆகியவை உயர்தனிச் செம்மொழிகளாகும். இவற்றுள் இலத்தீனுக்குப் பெரு மையளிப்பது தாந்தே எழுதிய டிவைன் காமெடி (Divine comedy) என்ற காப்பியமாகும். அதுபோலவே தமிழ்மொழி