பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5() புகுந்து, கணவனை இழந்து, சேர நாட்டில் நுழைந்து தெய் வமான தமிழ் நாடு பெற்ற தவக் கொழுந்தை, கற்பின் செல்வியை, கண்ணகியை வண்ணத் தமிழால் பாடுவது ஆகும். அத்துடன் அது மூன்று நாட்டையும் இனத்துக் கூறும் முத்தமிழ்க் காப்பியமாகும். இந்நூல் புகார்க் காண்டம், மதுரைக் காண்டம், வஞ்சிக் காண்டம் என்ற மூன்று காண்டங்களையும், அவற்றுள்ளடங்கிய மங்கல வாழ் த்து முதல் வரந்தரு காதை ஈறாக உள்ள முப்பது காதைகளை உடையது. வெண்பா, அகவல், கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய இயற்றமிழ்பாக்களையும், வரிப் பாடலாகிய இசை பாடல்களையும் கொண்டு நாடகப் பேரிலக்கியமாக வினாவா கும் ஒரே நூல் சிலப்பதிகாரமாகும். பண்டைத் தமிழரின் பண்பாடு, தமிழர் நாகரிகம், அவர்கள் வளர்ச்சி, அழகுக் கலைகள், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை, அவர்களின் செல்வச் செழிப்பு, அக்காலத் தமிகத்தின் வளம், தமிழர்கள் பிற நாட்டவரோடு செய்த கடல் வாணிகம் செய்த போர் முதலியவற்றை உள்ளங்கை நெல் லிக்கனி போல விளக்கும் சீரிய நூல் சிலப்பதிகாரமாகும். மேலும் தமிழரின் கலை வளத்தையும் தமிழ் மொழியின் செழுமையையும் அதிற்கானும் சொற்செறிவையும் சிலப்பதி காரத்திலே காணலாம். இந்நூல் 5108 வரிகளாலானது. காப்பிய வரிசையில் முதலிடம் பெறும் இச்சீரிய நூலே இயற்றியவர் தமிழ்ப் பெருவேந்தன் செங்குட்டுவனின் இளவலாகிய இளங்கோவடிகள் ஆவார். இவரது காலம் கி. பி. 200-க்கு உட்பட்டதாகும். அடுத்து இந்நூல் துதலும் கதையைச்சிறிது காண்போம். கோதிலாத் திருவினுள் கண்ணகிக்கும் கண்டோர் கொண் டேத்தும் செவ்வேள் கோவலனுக்கும் திருமணம் நடந்தேறியது . காதற்காம அன்பில் சில ஆண்டுகள் அவர்கள் திளைத்திருந்தனர். நாடக நூால் திறம் நன்குணர்ந்த பொம் கொடியாள் மாதவி அரங்கு ஏறிலை பொது அரங்கு