பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 இந்நூலின் பிறிதொரு சிறப்பு இடையிடையே உரைநடை விரவி வந்திருப்பதேயாகும். காதைக்குக் காதை, கதை தொடர்பு கொண்டு செல்வது மற்றொரு குறிப்பிடத் தகுந்த சிறப்பாகும். இந்நூலில் இடம் பெற்றுள்ள பல வரிப் பாடல்கள், குரவைப் பாடல்கள், இசைப் பாடல்கள், ஆகிய அனைத்தும் செவிக்கு இன்பம் பயப்பனவாகும். உ.பெ.வி தி , அவலம், பெருமிதம் ஆகிய மூன்று சுவைகளுக்கும் உரிய நிலைக்களமாக அந்நூல் விளங்குகின்றது. சிலப்பதிகாரம் நுதலும் பொருள் மூன்றாகும். அவை

'அரசியல் பிழைத்தோர்க்கு அறங்கூற்றாவது உம் உரை சால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்து வந்தூட்டும் என்பதுஉம் ஆகும். இக் காவியத்தின் தலைவியாகிய கற்புடைச் செல்வி கண்ணகி தன் கணவன் கோவலனுடன் காற்சிலம்பு காரணமாக மதுரை சென்றதும், ஆங்கு கோவலன் கொலையுண்டு இறந்ததும், பாண்டியன் தவறிழைத்த காரணத்தால் உயிர் நீங்கியதும், அது கண்டு அவனது மனைவி கோப்பெருந்தேவி மாண்டதும், மதுரை எரியால் அழிந்ததும், கண்ணகி விண்ணகம் சேர்ந்த தும் ஆகிய அத்தனையும் நிகழ்ந்தனவாதலால் ஆசிரியர் இதற்குச் சிலம்பு - அதிகாரம் = சிலப்பதிகாரம் எனப் பெயர் சூட்டினார். மேலை நாட்டுப் புலவர் மாத்யூ அர்குல்டு என்பவர் இலக்கியம் என்பது உணர்ச்சி வெள்ளத்தின் இருப்பிட என்கிறார். அதனை மனையறம் படுத்த காதையில் கண்ணகியை நோக்கிக் கோவலன் கூறுகின்ற,