பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54 ஆசிரியரது காலை மாலை வருணனைகள் படிக்கப் படிக்கத் தெவிட்டா இன்பம் பயப்பனவாகும் . அலைகடலை ஆடையாகவும், மலையை மார்பாகவும், மேகங்களைக் கூ ந்தலாகவும் ஆறுகளை முத்து மாலைகளாகவும், இருளைப் போர்வையாகவும் கொண்டு உறங்கும் நிலமாகிய செல்வமகளை போர்வை அகலுமாறு தன் கதிர்களாகிய கைகளால் நீக்கி ஞாயிற்றுச் செல்வன் கண்டான் என்று கூறவந்த ஆசிரியர், “அலைநீராடை மலைமுகிலாக தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற் கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை புதையிருட் படாஅம் போக நீக்கி உதைய மால்வரை யுச்சித் தோன்றி உலகுவிளங் கவிரொளி மலர்கதிர் பரப்பி' என்று பாடியிருக்கும் பகுதியும், மனத்திற்கு மகிழ்ச்சியூட்டும் மாலைக் காட்சிகளே, "குழல்வளர் முல்லையிற் கோவலர் தம்மொடு மழலைத் தும்பி வாய்வைத் தூத அறுகாற் குறும்பெறிந் தரும் புபொதி வாசம் சிறுகாற் செல்வன் மறுகிற் றூற்ற எல்வளை மகளிர் மனிவிளக் கெடுப்ப மல்லன் முதூர் மாலைவந்திறுத்தது' என்று கூறியிருப்பதுவும் படித்து இன்புறுதற்குரியனவாகும் கருத்துக்களின் தொகுதியே இலக்கியம்' என்பது எமர்சன் என்பவர் கருத்தாகும், இதன்படி பார்ப்பின் சிலப்பதிகாரம் பல அரும் பெரும் கருத்துக்கள் உடைய நூலாகும். ஒவ்வொரு கருத்தும் நம்மை நன்னெறிப் படுத்தும் பொன்னனைய கருத்தாகும். பொன் எழுத்துக்களால் பொறித்து வைக்கப்பட வேண்டிய கருத்துக்கள் சிலம்பில் நிறைய உள. சில வருமாறு: