பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55 -பரிவு மிடுக்கனும் பாங்குற நீங்கு மின் தெய்வந் தெளி மின் றெளிந்தோர்ப் பேணு மின் பொய்யுரை யஞ்சு மின் புறஞ்சொற் போற்று மின் ஊனூண் டுறமி னுயிர்க்கொலை நீங்கு மின்,' இத்தகைய தலைசிறந்த காப்பியத்தின் நலன்கனே நுகர் வது தமிழர்தம் தலையாய கடமையாகும். இதோடு தொடர்புடைய பிறிதொரு தலை சிறந்த காப்பியம் மணி மேகலையாகும். அதனை அடுத்து ஆராய்வோம். மணிமேகலை சிலப்பதிகார காலத்தை ஒட்டித் தோன்றிய நூல் மணி மேகலையாகும். இது கோவலனுக்கும் மாதவிக்கும் பிறந்த மணிப் பூங்கொடியாகிய மணிமேகலையின் வரலாற்றைக் கூறுகிறது. மணிமேகலை 'மாபெரும் பத்தினி மகளாவாள் : அவள் ஊழ் தருதவத்தள் ; சாபசாத்தி : காமற் கடந்த வாய்மையள் : கற்பின் கொழுந்து , பொற்பின் செல்வி. மேலும் அவள் அன்ன நடையினள் ; மயிலின் சாயலள் ; பண்ணுங்கிளியும் பழித்த தீஞ்சொலாள் இத்தகைய பெண் மையும் விரும்பிப் போற்றும் பேரழகு மிக்க மணிமேகலை பூண்ட துறவினைப் பற்றி இந் நூல் கூறுவதால் இதனை 'மணிமேகலை துறவு' எனக் கூறுவாருமுளர். பண்பால் இந் நூல் சிலப்பதிகாரத்திற்கு இணைமகுடமாக விளங்குகின்றது, இரு காப்பியங்களும் ஒரே இணை காப்பியம் என்று தமிழ் மரபு கருதுகிறது. அம்முறையிலே சிலம்பு அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுக்கும், மேகலை மூன்றும் அடக்கிய முழுப் பாலாகிய வீட்டுப் பாலுக்கும் உரியதெனக் கொள்பவரும் உண்டு. எனவேதான் இரண்டினையும் "இரட்டைக் காப்பியங்கள்" என்று நாம் வழங்கி வருகிறோம். சிலப்பதி காரத்தில் காணப்படும் முக்காண்டப் பாகுபாடு இக் காப்பியத்தில் இல்லையெனினும் சிலம்பைப் போலவே முப்பது காதைகளில் தன் கதையை விரித்துச்