பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 செல்லுகிறது. காதைக்குக் காதை கதைத் தொடர் நெறியே செல்லுகிறது. இந்நூல் ஆசிரிய நடையாற் செல்வது. 4626 வரிகளால் ஆயது. இதன் ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனர் ஆவார். இவரின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சீத்தலை இவர் மதுரையம் பதியிலே கூலவாணிகம் செய்தார். எனினும் இவர் தமிழில் பழுத்த புலமையும், புத்த சமயத்தில் ஆழ்ந்த பற்றும் உடையவர். எனவே கடைச் சங்கப் புலவர்களில் ஒருவராய் இவர் விளங்கியதில் வியப்பொன்று மில்லை. சிலப்பதிகாரமும், மணிமேகலையும் ஒரே காலத்தில் எழுந்தன என்பது ஒரு சிலர் கருத்து; மற்றுஞ் சிலர் இரண்டும் வெவ்வேறு காலத்தைச் சேர்ந்தவை என்பர். ஆனால் பின்வரும் பதிகங்களின் துணை கொண்டு சாத்தனாரும் இளங்கோவடிகளும் ஒரே காலத்தவர் எனக் கூறலாம். இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ட வளங் கெழு கூல வாணிகன் சாத்தன் ஆறைம் பாட்டில் அறிய வைத்தான்’’. (மணிமேகலை) 'இவ் வாறைந்தும் உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள் உரைசா லடிகளருள மதுரைக் கூல வாணிகன் சாத்தன் கேட்டனன்.” (சிலம்பு) சிலப்பதிகாரம் பலவகைப்பாவும் இசையும் கலந்த இன்பம் பயக்கும் நூலாகும். மணிமேகலையோ அகவலால் ஆனது. அது மட்டுமன்று; நூல் முழுதும் சமயக் கருத்துக்களே நிறைந்துள்ளன; சமயப் பிரசாரமே நூலின் முழு நோக்கமாகத் தெரிகிறது. எனவே பிற சமயத்தார் நூலைப் படிக்கப் போதிய விருப்பங் கொள்ளார். ஆனால் இந்நூலி