பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 58


அவலச் சுவையினை அடிப்படையாகக் கொண்டு தமது காப்பியத்தைப் பாடிய சாத்தனர் தமது நூலில் பல இடங்களில் இயற்கையின் எழிலைச் சொற்களால் என்றென்றும் அழியாக வண்ணம் ஒவியமாகத் தீட்டியுள்ளார். ஓரிடத்தில் இவர் ஒரு நடன அரங்கை அழகுடன் அமைத்துக் காட்டுகிறார். நாட்டியம் நடைபெறும் இடம் பூத்துக் கொழிக்கும் ஓர் அழகிய பூம்பொழில். தும்பி குழலின் இசையைப் பொருத்திக் காட்ட, இளைய வண்டினங்கள் நல்ல யாழின் இசையை முரலுகின்றன. இப்பொழிலுக்கு எதிரே வெயிலும் நுழையாத அடர்ந்த ஒர் இளமரக்கா. இயற்கையின் எழிலிலும் இசையின் இன்பத்திலும் தன் உள்ளத்தைப் பறி கொடுத்த மயிலொன்று தன்னை மறந்து அரங்கேறி ஆடி நின்றது. இந் நடனக் காட்சியை மந்திகள் கண்டு மகிழ்ந்தன. இதனைப் புலவர்,

   "பரிதியஞ் செல்வன் விரி கதிர்த் 
                       தானைக் 
   கிருள்வளைப் புண்ட மருள்படு 
                       பூம்பொழிற் 
   குழலிசை தும்பி கொளுத்திக் 
                        காட்ட 
   மழலை வண்டினம் நல்லியாழ் 
                        செய்ய 
   வெயினுழை பறியாக் குயினுழை 
                        பொதும்பர் 
   மயிலா டரங்கின் மந்திகாண் 
                        பனகாண்"
   என்று கற்போர் நெஞ்சைக் கவரும் வண்ணம் பாடியுள்ளார்.
   உவமை அணி, அணிகளிற் சிறந்ததும் தலையாயதும் ஆகும் என்பது நாமறிந்ததே. சாத்தளுர் சிறந்த உவமைகளின் வாயிலாக தமது கருத்துக்களை நன்கு வெளியிட்டுள் ளார். அந்தி மாலைக் காட்சியைக் கூற வந்த அவர்,
   "அமரக மருங்கிற் கணவனே 
                          யிழந்து 
   தமரகம் புகூஉ மொருமகள் போலக் 
   கதிராற்றுப் படுத்த முதிராத் 
                          துன்பமோ 
   டந்தி யென்னும் பசலைமெய் யாட்டி 
   வந்திறுத் தனளான்'