பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63 கேமசரி, கனகமாலை, வி மலை, சுரமஞ்சரி, இலக்கண ஆகிய எண்மரைத் தனித்தனியே மணந்து கொண்ட செய்திகளும், 2ம் இலம்பகத்தில் கோவிந்தை என்ற ஆயர்குல மங்கையைச் சீவகன் தன் நண்பனுமாகிய பதுமுகனுக்கு மணம் புரிவித்த செய்தியும் கூறப்பட்டிருப்பதாலும், 1, 10, 11, 13-ஆம் இலம்பகங்களினும் சீவகன் முறையே நாமகள், மண்மகள், பூமகள், முத்தி மகள் என்னும் இவர்களை மணந்து கொண் டதாகவே உருவகித்திருப்பதாலும் இந்நூல் மணநூல் என்று வழங்கப்படுகின்றது. மேலும் பத்து வகை வனப்பையும், ஒன்பான் சுவையையும் சிறப்பாக இன்பச் சுவையையும் இந்நூல் கொண்டு விளங்குவதால் இந்நூலை மணணூல் என்று கூறுவது சாலப்பொருத்தும். சிந்தாமணியை எழுதியவர் திருத்தக்கதேவர் என்னும் சமண முனிவர் ஆவார். எனவேதான் சமண சமயக் கருத்துக்கள் பல இந்நூலில் தெளிக்கப்பட்டுள்ளன. இந்நூலின் காலத்தைப் பற்றி ஆராய்ந்த அறிஞர் பெருமக்கள் இதற்கு ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தை முன் எல்லையாக வும் பத்தாம் நூற்றாண்டினைப் பின் எல்லையாகவும் கூறியுள்ள னர். தனித் தமிழ் நடையில் இயங்கும் சங்க இலக்கியங்கள், காலப்போக்கில் அயலவர் படையெடுப்புக்களினல் எல்லாத் துறைகளிலும் நிகழ்ந்த மாறுதல்களின் காரணமாய் பிற்காலத் தமிழ்மக்களுக்கு எட்டாத தாரத்தில் போய்க் கொண்டிருந்தன. எனவே மக்களுக்கு நன்கு புரியவல்ல புதுமையான இலக்கியமொன்று தேவைப்பட்டது. அச்சூழ் நிலையில் தோன்றிய முதற் பெருநூல் சீவக சிந்தாமணி யாகும். அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற்பயனே’’ என்பதற்கு இலக்கியம் சீவக சிந்தாமணியே. இத்தகு நாலுக்கு உச்சிமேற் புலவர் கொள் நச்சினர்க்சினியர் உரை செய்துள்ளார். இந்நூல் காப்பியச்சுவை பல நிரம்பி விளங்குவதாகும். கற்றவர் உள்ளங்களைக் களிப்பிக்கும் தன்மை உடையது.