பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



         x
      பாராட்டுரை

போசிரியர் மா.ரா.வே.சா. குருசாமி எம்.ஏ.,எம்.லிட். தமிழ்த்துறைத் தலைவர் பீளமேடு, கோவை. தமிழ்ச் செல்வத்தைத் தம் மரபுவழி உரிமையாகப் பெற்றவர் அருங்கலைக்கோன் திரு. அ. திருமலை முத்துசுவாமி அவர்கள். தமிழ் மொழியிலும் நூலக இயலிலும் நிறைகலைப் பட்டம் பெற்றவர் : ஆசிரியப் பயிற்சியிலும் பட்டம் பெற். றுள்ளார். தமிழாய்வுத் திறத்தை நிலைநாட்டும் வகையில் ஒரு பட்டமும் எம். லிட்.) அவருக்கு உண்டு. தமிழிலும் நூலக இயலிலும் தனித் தனியே டாக்டர் பட்டம் பெறுதற்குரிய முயற்சியில் ஈடுபட்டுள்ள தனிச் சிறப்பும் உடையவர் திரு. திருமலைமுத்துசுவாமி. புலவர், அறிஞர், ஆய்வாளர், நூ லாசிரியர், நூலகவியல் துறைப் பேராசிரியர் ......... பல திறம் உடைய நண்பர் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பாகிய இந்நூலினை முதலில் படிக்கும் வாய்ப்பினைப் பெற்றேன் தொல்காப்பியர் முதல் மு.வ.வரை கனிந்த புலமைச் செல்வர்களே நண்பர் நமக்கு இந்த நூலிலே அறிமுகப்படுத் துகிறார், டாக்டர் தெ.பொ.மீ. அவர்கள் இலக்கிய வரலாற்றை இக்காலத்திலிருந்து தொடங்கிப் பழங்காலம் நோக்கி விளக்க வேண்டும் என்று அடிக்கடி சொல்வார். இந்த உத்தியினை இந்நூலில் காணுகின்றோம். டாக்டர் மு. வ. பல திறப்பட்ட துறைப் புலமைக் களஞ் சியமாகப் பொலிந்த பெருமான் ; அவர்தம் நாவல் திறனை முதல் கட்டுரை ஆய்வு முறையில் தெளிவுபடுத்துகின்றது. திரிகூடராசப்பரின் குற்றாலக் குறவஞ்சியை ஆசிரியர் அறி