பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 சமயத்துறையில் ஈடுபட்ட சங்க இலக்கியப் புலவர்களில் தன் சிறந்தவராகிய நக்கீரராலும் பாரியானவன் பாடப் பெற்றுள்ளான். ஆளுல் இற்றைத் தமிழ் நாட்டில் பாரியின் பெயர் தெரியாமலிருப்பது மிகவும் வருந்தத் தக்கதே. இதற்குக் காரணம், ஒன்று பாரியைப் பற்றிய தனிப்பட்ட இலக்கியம் இல்லாமையும், மற்றொன்று; சங்க இலக்கியம் படிக்கக் தொடர்பற்றுப் போனதும் ஆகும். பாரியும் பறம்புப் போரும்

  இனி நாவீறு படைந்த நக்கீரர் பாடியுள்ளதைக் கொண்டு, பாரியின் வரலாற்றின் ஒரு பகுதியைப் பகர்வாம். நக்கீரர் பாரியின் வள்ளன்மையைக் "கைவண் பாரி" என்ற ஒரு தொடராலேயே நன்கு எடுத்துக் கூறியுள்ளார். மேலும் அவர் பாரியின் வீரத்தைப் பற்றியும் நன்கு விரித்துைரைத்துள்ளார். பாரியும் மூவேந்தரும் இயற்றிய பறம்புப் போரைப் பற்றிக் கூறுமிடத்து பாரியின் போர் வன்மையை "வேந்தர் ஒட்டிய பாரி" என்று குறிப்பிடுகின்ர

றார், இங்கு வேந்தர் என்ற சொல்லை நோக்க வேண்டும். தமிழ் நாட்டில் "வேந்தர்" என்ற சொல், சேர சோழ பாண்டியரென்ற முடியுடை மூவேந்தரைத்தான் குறிக்கும். இலக்கியங்களும் அதையேதான் குறிப்பிடுகின்றன. போர் எவ்வளவு நாள் நடந்ததென்பதை ஒருவரும் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறவில்லை. "யாண்டு பல கழியினும்" என்று நக்கீரர் குறிப்பிடுவதிலிருந்து போர் நீண்டகாலம் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை நம்மால் அறிய முடிகின்றது. அத்துடன் அவர் மக்கள் முற்றுகைக் காலத்தில் ஆம்பல் பூவையும் மலே நிலத்தில் பயிரிடப்பட்ட ஐவன நெல்லையும் உண்டு ஊக்கந் தளராது போர் புரிந்து வென்றனரென்றும், இப்போரிலே பாரிக்கு வலது கை போல இருந்து உதவி புரிந்தவர் கபிலரென்றும் குறிப்பிடுகின்ருர், கபிலர் உடனிருந்து பாரிக்கு உதவியதை அவர் "உலகுடன் திரிதரும் பலர் புகழ் நல்லிசை வாய் மொழிக் கபிலன் சூழ" என்று கூறி புள்ளார். தன்னோடொத்த ஒரு புலவனை மற்றொரு புலவன்