பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

72 பிற் கிடைப்பனவாகும். நீங்கள் புலந்தோறும் உங்களது தேர்களையும், மரந்தோறும் உங்களது யானைகளையும் கட்டினாலும் கூட நாங்கள் சளைக்க மாட்டோம். உங்களுக்குத் தோல்வியேதான். ஆனால் பாரியை வெல்லுவதற்கு ஒரே ஒரு வழிதான் உண்டு. அதாவது அவன் கலைப்பித்தனாவான். உங்களது வீரம் அவனிடம் செல்லாது. கலையால் மாத்திரம் தான் அவனே வெல்ல முடியும். பாணரும் கூத்தரும் விறலியரும் அவனது நாட்டில் எங்கும் சிறப்புடனிருக்கின்றனர். ஆதலின் நீங்கள் போர்க்கோலம் மாற்றி உங்களது துணைவர் கூத்தர் வேடம் புனைந்து:ஆட நீங்கள் யாழுடன் பாணர் வேடம் புனைந்து பாடி வந்தால், தன்னுடைய குன்றை உங்களுக்குத்தருவான்" என்று கூறுமுகத்தான், "அளிதோ தானே பாரியது பறம்பே நளிகொண் முரசின் மூவிரு முற்றினு முழவ ருழாதன நான்குபய னுடைத்தே ஒன்றே, சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே இரண்டே, தீஞ்சுளேப் பலவின் பழமூழ்க் கும்மே மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே நான்கே, அணிநிற வோரி பாய்தலின் மீத ழிந்து திணிநெடுங் குன்றந் தேன்சொரி யும்மே வான்க னற்றவன் மலையே வானத்து மீன்க ணற்றதன் சுனையே யாங்கு மரந்தொறும் பிணித்த களிற்றினி ராயினும் புலந்தொறும் பரப்பிய தேரினி ராயினும் தாளிற் கொள்ளவிர் வாளிற்ரு ரலன் யானறி குவனது கொள்ளு மாறே சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி விரையொலி கூந்தனும் விறலியர் பின்வர ஆடினிர் பாடினிர் செலினே நாடுங் குன்று மொருங்கீ யும்மே” என்று பாரியது புரவலர்க் கருமையும் இரவலர்க் கெளிமையும் குறித்துப் பாங்குடன் பாடியுள்ளார். இக்கூற்றால்