பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 75 முதலியவற்றை எடுத்துரைத்து அவர்களே மணஞ் செய்து கொள்ளும் படி வேண்ட, அவன் உடன்படாமையால், இருங்கோவேள் என்பானிடஞ் சென்று அவனையும் அவ்வாறு வேண்ட, அவனும் அங்ஙனமே உடம்படானாய் மறுக்க, இதற்காக அவனை முனிந்து பாடினர். இறுதியில் பாரிகுடிக்கும் மூவேந்தர்க்கும் உண்டாகிய பகைமை பற்றி அரசர் எவரும் பாரிமகளிரை மணஞ்செய்து கொள்ள இசையாமை யால் கபிலர் மனம் நொந்து, அம் மகளிரைச் சில பற்றற்ற அந்தணர்களிடம் அடைக்கலப் படுத்திவிட்டு திருக்கோவலூரில் வடக்கிருந்தாரென்றும், இக் குளித்தாரென்றும் தெரிய வருகிறது. திரு பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதிய 'கபிலரும் பாரியும்' என்ற கட்டுரையில், கபிலர் திருக்கோவலூரை அடைந்து தன் நண்பஞகிய திருமுடிக்காரியின் வழியில் வந்த எழிலும் இளமையும் வாய்ந்த ஏறனையார்க்குத் தாம் அழைத்து வந்த பூவை யனைய பாவையரை அளித்தனர் என்று காணப் பெறு கின்றது. இவ்வாறு பாரிக்காகவே உயிர் வாழ்ந்த கபிலர், உயிர் நீப்பதற்கு முன் "பாரி! நீயும் நானும் கலந்த நட்பிற்குப் பொருந்த யானும் நின்னுடன் கூடப் போவதற்கு மன மியையாமல், 'நீ ஈண்டுத் தவிர்க’ என்று சொல்லி இவ்வாறு மாறு பட்டனையாதலின், நினக்கு நான் பொருந்தின வனல்லேன்; அதனுள் நீ எனக்கு உதவி செய்த காலங்களிலும் என்னை வெறுத்திருந்தனே போலும்; எங்ஙனமாயினும் இப்பிறப்பின்கண் நீயும் நானும் கூடி இன்புற்றிருந்தவாறு போல மறு பிறப்பினும் நின்னெடு கூடி வாழ்தலை விதி கூட்டுவதாக" என்று பாடி, உள்ளமுருகி உயிர் நீத்தமை, கபிலர் பாரியிடத்துக் கொண்டிருந்த அளவிடற்கரிய அன்பினை எடுத்துக் காட்டுகின்றது.

  ஒரு சிலர் பாரிக்காகவே வாழ்ந்த கபிலர் அவனது முடிவைப்பற்றிக் காட்டாயம் பாடியிருக்கலாமென்றும், தங்கள் குலத்திற்கு இழுக்கு ஏற்படும் என்று கருதி, சங்கப் பாடல்களைத் தொகுத்த வேந்தர்கள், இது போன்ற பாக்