பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 77 என்று கொடிக்கு இரக்கம் காட்டியவனின் பெண்களுக்கு இரக்கம் காட்டுங்கள் என்று பாடியிருப்பது, உள்ளத்தை உருக்குவதாய் உள்ளது.

பாரியது பறம்பு

    பாரியின் மலை, சுனை, இவற்றைப் பற்றி பல புலவர்கள் பலபடப் பாடியுள்ளனர். கபிலர் பறம்பு நாட்டைப் பிரியுங்கால் , அதுகாறும் தமக்கு உறையுளும் உணவும் நல்கி யின்புறுவித்த இனிய பறம்பினது நன்றியை அவரால் மறக்க முடியவில்லை. அதனால் அவருள்ளத்தே பிரிவாற்றாமை தோன்றிப் பேதுறுத்த, நெஞ்சு கலங்கி, பறம்பினை நோக்கி நின்று,

"ஒ: பெரிய புகழையுடைய பறம்பே முன்பு பல சிறந்த உணவையும் விரும்பியவாறே தரும் மிக்க செல்வம் முதிர்ந்து எம்முடன் நட்புச் செய்தாய். இப்பொழுது பாரி இறந்தாளுகக் கலங்கிச் செயலற்று வளையணிந்த முன்கையை உடைய மகளிரின் மணங்கமழும் கரிய கூந்தலைத் திண்டு வதற்கு உரியவரை நினைந்து நீர் வார்கின்ற கண்ணை யுடையேமாய் நின்னைத் தொழுது வாழ்த்திச் செல்கின் றோம். நீ வாழ்வாயாக" என்று கூறுமுகத்தான்,

  "மட்டுவாய் திறப்பவு மைவிடை வீழ்ப்படைய 
   மட்டான் றானாக் கொழுந்துவை யூன்சோறும்
   பெட்டாங் கீயும் பெருவளம் பழுனி
   நட்டனை மன்னோ‌ முன்னே யினியே 
   பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று 
   நீர்வார் கண்ணேந் தொழுதுநிற் பழிச்சிச் 
   சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே 
   கோறிரண் முன் கைக் குறுந்தொடி மகளிர் 
   நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே"

என்று பறம்பின் பண்பினைப் பாராட்டிப் பேசுகின்றார். மேலும் தேர் வழங்கும் இருக்கையை உடைய உயர்ந்தோ