பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 78 னது மலை, அவன் உளனாய காலத்துப் புகழாலுயர்ந்து, காணாதார்க்கும் செவிப் புலனாகத் தோன்றும்; இப்பொழுது பிற மலைகள் போல் கட்புலனளவிற்றாய், இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்; சிறிது எல்லை போய் நின்றோர்க்கும் தோன்றும்" என்று இரங்கிக் கூறுமுகத்தான்,

  "ஈண்டுநின் றோர்க்குத் தோன்றுஞ் சிறுவரை 

சென்று நின் றோர்க்குந் தோன்றும் மன்ற களிறு மென்றிட்ட கவளம் போல நறவு பிழிந்திட்ட கோதுடைச் சிதறல் வாரசும் பொழுகு முன்றிற் றேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே" என்று பாடியுள்ளார்.