பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



80

சிதறுண்டு கிடந்த தங்கள் முன்னோர் பாடல்களைத் திரட்டி தற்கண் நாட்டமுடையராப். எட்டுத்தொகை முதலிய தொகை நூல்களைத் தொகுத்திருத்தல் கூடும். இவ்வாறுதான் கிரேக்க மொழியிலும் மிகப் பழைய காலத்தில் அந்தலாபி" (Anthology) என்று வழங்கும் தொகை நூல் தொகுப்பட்டது கி.பி. 90இல் மீலிகர் என்பவரால் இது தொகுக்கப்பட்டது. பூந்துனர் என்பதே அந்தாலசி என்பதன் பொருளாகும்.

இத் தொகை நூல் பாடல்கள், தெய்வங்களையும், புகழுடன் விளங்கிய புவி மன்னர்களையும், பெரு நிகழ்ச்சிகளையும் பற்றிக்கூறுகின்றன. இவை நவின்றோக்கினிமை, நன்மொழி புணர்த்தல், சுருங்கச் சொல்லல், பொருள் ஆழமுடைமை முதலிய சிறந்த குணங்களைக்கொண்டு விளங்குகின்றன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றாகிய புறநானுாறும் இத்தகையதே. மீலிகருக்குப் பின்னர் நான்கு தொகை நூல்கள் தோன்றின. இறுதியில் கி.பி. 483-565 இல் அரசோச்சிய ஐச்டினியன் காலத்தில் தொகுக்கப்பட்ட நூல் சிறந்ததொருதொகை நூலாகும். இந்நூலில் காதற் செய்யுட்கள் பல துறைகளாகப் பிரிக்கப்பட்டுச் சேர்க்கப்பட்டுள்ளன. அகப்பொருள் நுதலும் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானுாறு போன்ற எட்டுத்தொகை நூல்கள் இத்தன்மையனவே. சுருங்கக்கூறின் தொகைநூல்கள் மக்களுக்குப் புத்துயிர் வழங்கிய அமிழ்தம் போன்றனவாகும். பழந்தமிழ்ப் பெருமக்களது பண்பு நலன்களையும், நனி நாகரிகங்களையும் நமக்கு எடுத்துக் காட்டுவன இத்தொகை நூல்களே.

காதலும் போர் முதலிய புற நிகழ்ச்களும் சங்க இலக்கி பங்களிலே கூறப்பட்டுள்ள பொருள்களாகும். வீரமும் காதலுந்தான் நம் முன்னோரது இரு கண்களாக விளங்கின எனக் கூறவேண்டும். அலையே பழந்தமிழர் வாழ்க்கைக் குறிக்கோள்கள் என்று கூறினும் அது மிகையாகாது. காதலை அகம் எனவும், போர் முதலிய போர் நிகழ்ச்சிகளைப் புறம் எனவும்