பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

81



பண்டை மக்கள் வழங்கினர். இலத்தின், கிரேக்கம் முதலிய மொழிகளில் காணப்பெறும் பழம் பாடல்களும் இவ்விரண்டையுமேதான் கருவாகக் கொண்டிலங்குகின்றன.

"சுவை மிக்க சொற்கள், கருத்துக்கு ஏற்ற சொற்கள். கட்டுரைச் சுவைபட அமைந்த சொற்செறிவு, எளிமையும் இனிமையும் ஆற்றலும் படைத்த செய்யுள் நடை, செவிக்கினிய ஓசை நயம்' ஆகிய அனைத்தும் சங்க இலக்கியப் பாடல்களிலே அமைந்திருப்பதைக் காணலாம். மேலும் இயற்கை உவமையைச் சித்திரிப்பதில் சங்கப் புலவரை மிஞ்சுவார் எவரு மில்லை. அவர்கள் தெளிந்த அறிவுக்குப் புலகைாத பொருள்களிலே கடுத்து. மிகைபடக் கூ றுதலை மேற்கொள்ளாது, மக்கள் வாழ்விற்குத் துணையாக விளங்கும் இயற்கைப்பொருள் கள் மீது மாருக் காதல் கொண்டு இன்புற்று இறும் பூதெய்தித் தாம் கண்டவற்றை, உணர்ந்தவற்றை அழகுத் தமிழிலே, பசுவைத்துச் சுவைத்துத் தேர்ந்தெடுத்த சொற்கள். பொருள் ததும்பும் தொடர்கள், கருத்தோடு பிணைந்து இயலும் இனிய இசை, அழகு நிரம்பிய வடிவங்கள்' ஆகிய வற்றுடன் கூடிய உணர்ச்சி மிக்க செய்யுள்களிலே வடித்துத் தந்தனர். இத்தகைய சங்க இலக்கியங்களின் இனிமையைக் கருதித்தான் வள்ளுவப் பெருந்தகை, நவில் தொறும் நூல் நயம் போலும்' என்று நவின்றனர் போலும்! இத்தகு சங்க இலக்கியங்கள் தமிழர் தம் கருவூலங்களாகும்; கலைச் செல்வங்களாகும்; வாழ்வின் வழிகாட்டிகளாகும். சுருங்கக் கூறின், சங்க இலக்கியங்கள், சங்கச் சான் றோர் அக்கால மக்கள் வாழ்க்கையை அகம், புறம் என்று இருதிறமாகக் கூர்ந்து நோக்கி உணர்ந்து பாடியதாக விளங்கும் வாழ்க்கை இலக்கியங்களாகும்.

அகப்புறப் பாகுபாடு

உலக மொழிகளிலே செம்மொழிகள் ஐ ந்து. அவற்றிலே நாட்டு வழக்கற்று ஏட்டு வழக்கிலே மட்டும் நிலவுவன மூன்று. நாட்டு வழக்கிலும் ஏட்டு வழக்கிலும் நிலவுவன