பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



82

இரண்டு. அந்த இரண்டிலும் தனக்கேயுரிய தனி எழுத்து முறையும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வளர்ந்து வருகின்ற இலக்கிய வளர்ச்சியும் உடையது ஒன்றே, அந்த ஒரு மொழியே தமிழ் மொழியாகும்.

செம்மொழிகள் ஐந்திலும் இலக்கியம் மிகவுண்டு , அவற்றிற்குத் தொன்மைச் சிறப்பும் உண்டு. ஆனால் செம்மொழிகளிலே ஏனைய நான்கிற்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு பெரும் புகழ் படைத்த நந்தம் செந்தமிழ் மொழிக்குண்டு. அத்தகைய பெருமையைத் தருவது பொருளிலக்கணமாகும். பிறமொழிகளிலே எழுத்துக்கு இலக்கணம் உண்டு. ஆனல் அம்மொழிகளிலே பொருளிலக்கணம் உண்டா? அம்மொழி வல்லார் வாழ்க்கையை அகம், புறம் என்றுஇருகூறாக்கினர் அவற்றை எழுத்தில் வடித்தனரா ? இலக்கியத்தில் புகுத்தினரா ? அன்று, அன்று; ஆயிரம் முறை சொல்க. ஆளும் தமிழிலோ அவை இரண்டும் உண்டு. மேலும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே தமிழ் வல்லார் வாழ்க்கையினை அகம் என்றும் புறம் என்றும் இரு கூறாக்கினர் ; ஒவ்வொன்றுக்கும் இலக்கணம் வகுத்தனர்; இலக்கியம் பல பிறந்தன. இப்படிக் கூறுவதல்ை பிறமொழிமக்கள் அகவாழ்வும் புறவாழ்வும் வாழவில்லை என்பது பொருளன்று; தங்கள் வாழ்வு அகம் புறம் என்று இரு வேறு வகைப்பட்டது என்பதை அம்மக்கள் அன்று உணரவில்லை; தமிழனே உணர்ந்தான் ; உலகிற்கு உணர்த்தினுள் என்பதே கருத்தென்க.

வாழ்க்கையின் உடல் புறம் ; உயிர் அகம். புறத்தின் அடிப்படை அகம் அகத்தின் மீது எழுப்புவது புறவாழ்க்கை. இரண்டும் சேர்ந்தது வாழ்க்கையாகும். ஒருவனுடைய அகவாழ்க்கை-வீட்டு வாழ்க்கை சிறக்கவில்லையேல் அவன்றன் புறவாழ்க்கை-நாட்டு வாழ்க்கையும் சிறப்படையாது. நாடும் வீடும் சிறக்க வாழ்வதே நல்வாழ்க்கை.

தமிழ் மக்களின் தொன்மைச் சிறப்புக்கும், வாழ்க்கை முறைகளுக்கும் ஒரு காப்பாக எழுதப்பட்ட தொல்காப்பியத்