பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



83

இல் தொல்காப்பியர், அகம் என்றால் என்ன ? புறம் என்றால் என்ன ? அகத்தின் கூறுகள் யாவை ? புறத்தின் கூறுகள் யாவை ? என்று அருமையாகவும் ஆழமாகவும் விளக்கியுள்ளார்.

உருவும் திருவும் பருவமும் குலனும் குனனும் அன்பும் முதலியவற்ருன்தம்முள் ஒப்புமையராய் விளங்கும் தலைவனும் தலைவியும் வாழ்கூட்ட ஒரு தனியிடத்திலே சந்தித்துத் தம் முள் ஒத்த அன்பினராய்க் கூடும் கூட்டத்தின் கண் பிறந்த இன்பம் இத்தன்மைத்து எனக் கூறப்படாதது அகமாகும். இத்தன்மைத்து எனக்கூறுவது புறமாகும்.

அகம் என்பது மூவகைப் பெரும் பிரிவுகளை உடையது. கைக்கிகள,பெருந்திணை, ஐந்திணை என்பன அம் முப்பிரிவுகளாகும். இவற்றுள் பெருந்திணை என்பது பொருந்தாக் காமமாகும். அஃதாவது காதலர் இருவருக்கிடையே வயதானும், உருவானும் பிறவாற்றானும் பெருத்த வேறுபாடுகள் இருந்து அவர்கள் காதலிக்கத் தொடங்குதல் என்பதாம். கைக்கிளை என்பது ஒருதலைக்காமமாகும். அஃதாவது ஆண், பெண், என்ற இருவருள் ஒருவர் மட்டுமே காதல் கொள்வது ஆகும். ஐந்திணை என்பதுதான் உண்மையான அன்பின் அடிப்படையில் பிறக்கின்ற காதலாகும். எனவேதான் சான்றோர்கள் இதனை அன்பின் ஐந்திணை எனச்சிறப்பித்தனர்.

ஐந்திணையகவொழுக்கமானது.இருவகைத்து. ஒன்று களவு; மற்ருென்று கற்பு. களவு என்ருல் என்ன ? தலைவி தன் தோழியரோடு சோலை ஒன்றுக்கு வருவாள்; தலைவன் வேட்டையாடத் தன் தோழரோடு வருவான் ; பின்னர் முன்னைப் பிறவியிற் செய்த ஊழ்வினைப்பயனல் இருவரும் பொழிலின் கண்ணே தனிமையாக எதிர்ப்படுவர். பள்ளத்தைக் கண்டு பாய்ந்தோடும் வெள்ளம் போல இருவரும் மாறிப்புக்கு இதயம் எய்துவர். அதன் பின்னர் பெற்றோருக்கும், உற்றாருக்கும் தெரியா வண்ணம் சில நாள் மறைந்து மறைந்து சந்திப்பர். இருவரும் காதற் பயிரை அன்பெனும் நீரூற்றி