பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86

எட்டுத் தொகை

   சங்ககாலப் பெருமக்களின் வாழ்க்கையின் அகப்புற உண்மைகளே நன்கு தெரிந்து கொள்ளச் சிறந்ததொரு கருவியாக விளங்குவது எட்டுத்தொகையாகும். இவ்வெட்டுத்தொகைக் கண் பழந்தமிழ்ப் பெருமக்களின் அக வாழ்க்கையைப் பாடும் அகப்பொருள்  நுதலிய நூல்களும், புறவாழ்க்கையைப் பாடும் புறப்பொருள் நுதலிய நூல்களும் அடங்கியுள்ளன. பெயரளவிலேயே இத்தொகை எட்டு நூல்களைக் கொண்டதென்பது தெளிவாகிறது. இவ்வெட்டு நூல்களின் பெயர்களையும் குறிக்க,
 "நற்றினை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு 
  ஒத்த பதிற்றுப் பத்து ஒங்கு பரிபாடல் 
  கற்றறிந்தார் ஏத்தும் கலியோடகம் புறமென்று 
  இத்திறத்த எட்டுத் தொகை"

என்ற பழம் பாடலொன்று நிலவி வருகிறது. இவ்வெட்டு நூல்களில் புறநானுாறு, பதிற்றுப்பத்து, பரிபாடல் என்ற மூன்றும் புறப்பொருள் பற்றியனவாகும். ஏனைய ஐந்தும் அகப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்குவன

நற்றிணை

  நல்ல ஒழுக்கமாகிய அகத்திணையைப் பற்றி இந்நூல் கூறுவதால் இதனை மக்கள் நற்றிணை என வழங்கினன் போலும். இந்நூல் ஒரு தொகை நூல். ஒன்பது அடி முதல் பன்னிரண்டு அடி வரையிலுள்ள நானுாறு பாடல்களை உடையது. நூற்றெழுபத்தைந்து புலவர்களின் பாடல்கள் இந்நூலிலே அடங்கி உள்ளன. எட்டுத்தொகை நூல்களில் முதலில் வைத்துக் கூறப்படுவது இந்நூலேயாகும். இதனைத் தொகுப்பித்தவன் பன்னாடு தந்த வழுதியாவான். குறிஞ்சி. பாலை, முல்லை, நெய்தல், மருதம் ஆகிய ஐந்திணை ஒழுக்கங்களைப் பற்றிய பாடல்கள் இந்நூலில் தொகுக்கப் பட்டுள்