பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 இலக்கிய வகையின் வளர்ச்சியும் காணப்படுகின்றது. இந்த யாப்பு கி.பி. ஏழாம் நூற் றாண்டில் தோன்றிய தேவாரத் திருமுறைகளிலும் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தங்களிலும் பயின்று வழங்கக் காண்கின்றோம். அகத்திணை யொழுகலாற் றினை நானுாறு துறைகளாக வகுத்தமைத்துப் பொருள் தொடர் நிலையாக நானூறு செய்யுட்களால் முதன் முதல் கோவை பாடியவர் மணிவாசகப் பெருமானே யாவர். இவ்வாறு அவர் தேர்ந்து கொண்டமைக்கு நற்றிணை நானுாறு, குறுந்தொகை நானூறு, நெடுந் தொகை நானூறு என அமைந்த சங்கத் தொகையே அடிப்படையாக அமைந்திருத்தல் வேண்டும் என்று கருதுவதில் தவறில்லை. மேலும், இந்நூல் இயற்கைப் புணர்ச்சி முதல் பரத்தையிற் பிரிவு ஈறாக இருபத் தைக்து கிளவிக் கொத்துக் களாகப் பகுக்கப் பெற்ற இருபத்தைந்து அதிகாரங்களையுடையதாகும். இறையனார் களவியலுரை எழுத்துரு அமைந்த காலம் கி.பி. எட்டாம் நூற்றாண்டு என்பர் அறிஞர். களவியலுரையில் விரித்துரைக்கப்பெறும் துறைகட்கு இலக்கியமாக அந்நூலில் உரையாசிரியரால் காட்டப் பெறும் மேற்கோள் செய்யுட்களில் கட்டளைக் கலித் துறையிலமைந்த கோவைச் செய்யுட்கள் 326-உம் பாண் டிக் கோவை என்ற பெயரால் வழங்கப் பெறு கின்றன. இப்பாடல்களில் சிறப்பித்துப் போற்றப் பெறும் பாட்டுடைத்தலைவன் மாற வர்மன் அரிகேசரி என்னும் சிறப்பும் பெயரையுடையவனும் நெல்வேலிப் போரில் வெற்றி பெற்றவனாகிய கின்றசீர் நெடுமாறனா 14. பதினோராந் திருமுறை-காரைக்கால்அம்மை யார் அருளிச்செய்த திருவிரட்டைமணிமாலை’ இது கட்டளைக் கலித்துறை, வெண்பா யாப்பில் அமைந்த மாறி மாறி வரும் 20 பாடல்களைக் கொண்ட ஒரு சிறு பிரபந்தம்.