பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 87 வான். இவ்வேந்தன் ஞானசம்பந்தப் பெருமான் காலத்துப் பாண்டிய மன்னன் என ஆய்வாளர்கள் கூறுவர். களவியலுரையில் மேற்கோளாகக் காட்டப் பெற்றுள்ள பாண்டிக் கோவைப் பாடல்களுள் ஒரு துறைக்கே ஒன்றுக்கு மேற்பட்ட பாடல்கள் உள்ளன. பாண்டிக் கோவைச் செய்யுட்களாக 326 பாடல் கள் களவியலுரையில் காணப்பெறினும் அப்பாடல் களால் விரித்துரைக்கப்பெறும் அகத்துறைகள் 175 துறைகளேயாகும். தொல்காப்பியத்திலோ இறையனார் களவியலுரையிலோ அகத்திணைத் துறைகள் நானுாறு என்னும் இவ்வரையறை இடம்பெறவில்லை. களவிய லுரையை அடுத்துத் தோன்றியவர் மணிவாசகப் பெருமான். இவர்தாம் முதன் முதலாக 400 துறைகளை வரையறைப் படுத்தினார். எனவே இங்கு விருத்தம், தாழிசை, துறை என்ற யாப்புகளில் அமைந்த இலக்கியங்களை மட்டிலும் இனங்காட்டினேன். விரிவஞ்சி ஏனைய சிற்றிலக் கியங்களை விளக்கவில்லை. அவற்றைப் பற்றிய விளக்கங்களைப் பாட்டியல் நூல்களில் கண்டு கொள்ளலாம். 6. புதியவகைப் பாடல்கள்: பழைய யாப்பு முறைகள் பல்வேறு உணர்ச்சி வேறுபாடுகளைப் புலப்படுத்துவதற்குப் .ே ப து மானவை அல்லவென்றும், தாழிசை துறை விருத்தம் என்ற பாவினங்கள் தோன்றிய பிறகு இக் குறைபாடு ஒரளவு நீங்கியது என்றும் மேலே கண்டோம். கொச்சகக் கலிப்பாவின் இலக்கணம் கூறும் தொல் காப்பியச் செய்யுளியல் 149-ஆம் நூற்பாவின்,