பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 95 'ஒமெனப் பெரியோர்கள் - என்றும் ஒதுவ தாய் வினை மோதுவதாய், தீமைகள் மாய்ப்பது வாய், - துயர் தேய்ப்பது வாய், நலம் வாய்ப்பது வாய், நாமமும் உருவும் அற்றே - மனம் நாடரி தாய்ப்புந்தி தேடரிதாய், ஆமெனும் பொருளனைத் தாய், - வெறும் அறிவுடன் ஆனந்த இயல்புடைத் தாய்." (1) நின்றிடும் பிரமம்என் பார்; - அந்த நிர்மலப் பொருளினை நினைத்திடுவேன் நன்றுசெய் தவம்யோகம் - சிவ ஞானமும் பக்தியும் நணுகிடவே, வென்றிகொள் சிவ சக்தி - எனை மேவுறவே, இருள் சாவுறவே, இன் தமிழ் நூ லிது தான் - புகழ் எங்கினி தா யென்றும் இலகிடவே (2) இவை இரண்டும் நொண்டிச் சிந்து.' இவை ஒரெதுகை பெற்ற நான் கடிகள் அளவொத்து வந்த வியனிலைச் சிந்து வகைகள்; ஆனந்தக் களிப்பு, தெம்பாங்கு ஆகியவையும் சிந்து வகைகள். காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின் மீது காளிசக்தி யென்றபெயர் கொண்டு - ரிங் காரமிட் டுலவுமொரு வண்டு - தழல் காலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்கலெனும் கால்களா றுடையதெனக் கண்டு - மறை காணுமுணி வோருரைத் தார் பண்டு . 10. பாரதியார் : பாஞ்சாலிசபதம் - அழைப்புச் சருக்கம் - பிரமது தி.