பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 97 இங்ங்னம் புதுநெறி அமைப்பு முறையை வகுத்த பாரதி போன்ற கவிஞர்கள் இதனை நன்கு பயன் படுத்திக் கவிதைக் கலையை வளர்த்துள்ளனர், தமக்கு முன் மக்கள் பொழுது போக்கான விளையாட்டு களுக்கு உரியவைகளாக இருந்த அம்மானை, ஊசல், சாழல், முதலிய பாட்டு வகைகளை மணிவாசகப் பெருமான் அவற்றின் உயர்ந்த கருத்துகளை அமைத்துப் பாடியதால் அவை இன்றும் வாழ்கின்றன. இங்ங்னமே, கலிப்பா முதலிய பாடல்களும் வே றெதற்கோ பயன்பட்டிருந்திருக்கலாம்; அவற்றை நுட்ப மான அகப்பொருள் பாடல்கட்கும், பிற கருத்துகட்கும் கவிஞர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இன்று மனப்போக்காகப் பாடப்பெறும் சினிமாப்பாட்டுகள் அழிந்துபடினும் அவற்றுள் காணப்பெறும் ஒலி நய அமைப்புமுறை மட்டிலும் பிற்காலத்தில் கவிதைக் கலைக்குப் பயன்படும் என்று கருதலாம். பாரதியார் பாடல்களில் தோத்திரப் பாடல்கள் என்ற பகுதியில் எண்னற்ற புதுமுறைக் கவிதை களைக் காண முடிகின்றது. காணிநிலம் ஓம் சக்தி' 'பராசக்தி', 'சக்தி விளக்கம் சிவசக்தி புகழ் யோக சித்தி’, ‘மகாசக்தி வாழ்த்து' 'நந்தலாலா வெள்ளைத் தாமரை', 'வெண்ணிலாவே' என்பவற்றைக் குறிப்பிட லாம். இங்ங்னமே வேதாந்தப் பாடல்கள்’ என்ற பகுதி யில் அச்சமில்லை' 'ஆத்ம ஜெயம்’, ‘சங்கு, பரசிவ வெள்ளம் சித்தாந்த சாமி கோயில் தெளிவு: என்பன போன்றவை புதுநெறியில் வேரில் பழுத்த பலாவாக இனிப்பதைக் காணலாம். பல வகைப் பாடல் கன்’ என்ற பகுதியில், முரசு’ புதுமைப் பெண்’, பெண்மை’ என்ற பாடல்கள் புதுநெறியில் பழுத்த சிறந்த கவிதைகள். புதிய கோணங்கி என்ற பாடல் குடுகுடுப்புக் காரனையே நம்முன் கொண்டு வந்து