பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 99 வழங்கினேன். விழா மலரிலும் "ஆழ்வார் பாசுரங்களில் அக்ப் பொருள் தத்துவம் என்ற தலைப்பில் என் ஆய்வுக் கட்டுரையும் வெளி வந்துள்ளது. இந்த விழாவின் நினைவாக "கவிமணியின் கவிதைத் திறன்' என்ற ஒரு திறனாய்வு நூலை எழுதித் தந்துள்ளேன். கவிமணி யின் நூல்களின் உரிமை பாரி நிலையத்தாரிடம் உள்ளதால் நூலை அவர்களால்தான் வெளியிடப் பெறு தல் வேண்டும். அதுவும் அடைகாக்கப்படும் நிலையி லேயே உள்ளது. அது சிறகடித்துப் பறக்கும் நாள் எப்பொழுதோ? எனவே இக்காலக் கவிதைகளைப் பற்றியும் திறனாய்ந்துள்ளேன் என்ற செய்தியை இந்த அவையில் தெரிவிக்கின்றேன். புதிய வகைப் பாடலுக்குப் பின்னர் தோன்றிய இலக்கிய வகைகளாக (1) குழந்தை இலக்கியம் (2) புதுக்கவிதை இலக்கியம் என்ற இரண்டைக் கருதலாம். இவை பற்றிய விவரங்களை இனி விளக்க முயல்கிறேன். முதலில் குழந்தை இலக்கியத்தை நோக்குவோம். 7. குழந்தை இலக்கியம் புதுக்கவிதை தோன்றுவதற்குச் சற்று முன்னரோ அல்லது பின்னரோ குழந்தைப் பாடல்கள் தோன்ற, குழந்தை இலக்கியத்திற்கு வித்திடப்பெற்றதாகக் கருத லாம். தேசிய கவி பாரதியார் முதன் முதலாக பாப்பாய பாட்டு' என்ற கவிதையின் மூலம் வித்திட்டார். புதிய ஆத்திசூடி"யிலும் முரசு' என்ற பாட்டிலும் இப்பண் பைக் காணலாம். இவை இரண்டும் வயது வந்தோரின் அநுபவத்தையொட்டியே அமைந்துள்ளன. பாப்பா பாட்டு’ ஒடி விள்ை யாடுபாப்பா!-நீ ஒய்ந்திருக்க லாகாது பாப்பா!