பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f{}6 இலக்கிய வகையின் வளர்ச்சியும் காலை மாலை. என்னென்றும் கற்று மகிழச் செய்யுமிந்த்ர ஜாலக் கவிஞன் வள்ளியப்பன் தழைத்து வாழ்க வாழ்கவே!?? மழலையருக்கு "மலரும் உள்ளம் படைத்துத் தந்த அழ. வள்ளியப்பா இறையருளாலும் கவிமணியின் ஆசியாலும் இன்று குழந்தை இலக்கிய வாளில் ஒரு துருவமீன்போல் நீடு நின்று நிலைத்து வாழ்கின்றார். இவரைத் தொடர்ந்து இவரது வாரிசு போல் செட்டி நாடு தந்த மற்றோர் இளங்குழந்தைக் கவிஞர் குழ. கதிரேசன் என்பார். இவர் பல்லாண்டுகளாக மழலைச் செல்வங்களுக்கேற்ற பல கவிதைகளைப் படைத்து மழலையர் இலக்கியத்திற்கு வளம் சேர்த்து வருகின்றார். இவரது முதல் நூலாகிய எலி கடிதத பூனையும் பேசும கிளியும' என்ற நூலும் தமிழக அரசின் பரிசினைப் பெற்றுள்ளன. இவர் படைத்த பாடல்களில் சில : ஆடு நல்ல ஆடு அம்மே சொல்லும் ஆடு, தாடி உள்ள ஆடு தங்க உண்டு வீடு! இஃது ஆடு பற்றிய ஒரு பாடல். டிக்டிக் டிக்டிக் கடிகாரம்: டிங்டாங் டிங்டாங் கடிகாரம்! சின்ன முள்ளு அம்மாவாம்; பெரிய முள்ளு அப்பாவாம்! அம்மா அப்பா இருவரையும் அன்பாய்ச் சுற்றும் நொடிமுள்தான் இந்தக்குட்டிப் பாப்பாவாம்! இது கடிகாரம் பற்றிய ஒர் அற்புதமான கவிதை. 13. மலருமாலையும்-17 மல்ரும் உள்ளம்.2.1