பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 109 வண்ணப் பறவைகளைக் கண்டு-நீ மனத்தில் மகிழ்ச்சி கொள்ளு பாப்பா! காலை எழுந்தவுடன் படிப்பு-பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு; மாலை முழுவதும் விளை யாட்டு-என்று வழக்கப் படுத்திக் கொள்ளு பாப்பா! சாதிகள் இல்லையடி பாப்பா-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்! நீதி, உயர்ந்தமதி கல்வி-அதை நிறைய உடையவர்கள் மேலோர் . என்ற பாரதியாரின் பாடல்கள் கூடிக் குலாவி கும்மி யடித்து மகிழ்வதற்கேற்றவை. கல்லும் மலையும் குதித்து வந்தேன்-பெருங் காடும் செடியும் கடந்து வந்தேன்; எல்லை விரிந்த சமவெளி-எங்கும் நான் இறங்கித் தவழ்ந்து தவழ்ந்து வந்தேன். ஏறாத மேடுகள் ஏறிவந்தேன்-பல ஏரி குளங்கள் நிரப்பிவந்தேன்; ஊறாத ஊற்றாலும் உட்புகுந்தேன்-மணல் ஒடைகள் பொங்கிட ஓடிவந்தேன்' இவை கவிமணியின் ஆறு பற்றிய எட்டு பாடல்களில் இரண்டு. சிறுவர் சிறுமியர் ஆடிப்பாடிக் கும்மியும் கோலாட்டமும் அடித்து மகிழ்வதற்கேற்றவை இவை. SAAAAAAASLLLASHSHSLSHHMTTCeS LLeAAAA 15. பா.க : பல்வகைப் பாடல்கள் - பாப்பா பாட்டு-2,6,5 16. மலரும் மாலையும் - இயற்கை இன்பம் ، 4 ولد ساساني وايي