பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 113 கூறுகின்றனர். பூமியை நடுவாக வைத்துதான் ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற பழைய கொள்கை யைக் காபர்னிகஸ் மறுத்து, கதிரவனை நடுவாகக் கொண்டு ஏனைய கோள்கள் இயங்குகின்றன என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தியது போலவே, அது காறும் கல்வித்திட்டத்தினை நடுவாக வைத்துக் கற்பிக் கப்பெற்ற முறையைத் தவறு எனக் கண்டித்து, குழந்தையை நடுவாக வைத்துக் கற்பிக்கப் பெற வேண்டும் என்று கூறினார் ரூசோ. இக் கருத்து குழந்தைக் கல்வியில் முக்கியமானது. ஸ்விட்ஸ்ர்லாந்து நாட்டு அறிஞர் பெஸ்டலாஸ்ஸி என்பார் ரூசோவின் கொள்கையை வகுப்பறையில் நடைமுறைப் படுத்தினார். அவர் குழந்தை ஒரு விதைக்குள் எதிர்காலத்தில் பெரிய மரமாகும் ஆற்றல் சிறு வடிவில் உள்ளுறைந்திருப்பதைப் போலவே? (Latent) பிற்காலத்தில் வெளிவரவேண்டிய பேராற்றல் கள் குழந்தைகளிடம் உள்ளுறைந்து கிடக்கின்றன. என்று அவ்வறிஞர் எண்ணினார். எனவே, புலன்கள் வாயிலாகத்தான் கல்வி புகட்டவேண்டும் என்று வலி யுறுத்தினார். அவரும் புத்தகப்படிப்பை ஆதரிக்க வில்லை. இதனை வகுப்பறையில் ஒரு முறையாக வளர்த்தவர் இத்தாலி நாட்டு மாண்டிசாரி அம்மை யார் என்ற கல்விமுறை வித்தகர். கல்வி உலகில் தலை சிறந்து திகழ்ந்தவர் ஃபிரெபெல் என்ற செருமானிய அறிஞர். அவர் இயற்கை அன்னையும் மனிதனும் ஒன்றாக இருந்து கொண்டு இறைவனுடைய திருவுள்ளத்தை வெளிப்படுத்துகின்ற னர் என்று நம்பினர். எனவே குழந்தைகளின் -ുl-ഷഞ്ഞു-ജ്ജ- - 19. ஆல் அமர்வித்தின் அருங்குறளானான்’ என்று வாமனாவத்தைப் பற்றிப் பேசுவான் (பால, வேள்விப் - 24) கம்பன். இ-8