பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 置置穿 "மரபுக் கவிதை வந்தது-காலாவதி ஆகிவிட்டது' என்ற செய்தியை யாப்பிலக்கணத்தில் வரும் சில கலைச் சொற்களைக் கொண்டே படிப்பவர்கள் முறுவலிச்து மகிழ வெற்றி உணர்வுடன் விரித்துரைக் கின்றார் பேராசிரியை வெற்றிச் செல்வி. இன்னொரு புதுக் கவிஞர் புதுக்கவிதையை 'உடையையும் ஒப்பனையையும் நீக்கிவிட்ட கன்னி யாக அறிமுகம் செய்கின்றார். "யாப்புடைத்த கவிதை அணையுடைத்த காவிரி யாப்பற்ற கவிதை இயற்கை யெழில் இருக்க செயற்கையணி எதற்கென்று உடையுடன் ஒப்பனையையும் நீக்கிவிட்ட கன்னி’4 யாப்பைத் தவிர்க்கும்போதுதான் கவிதை தன் அனைத்து ஆற்றல்களோடும் புறப்படுவதாக இவர் செப்புகின்றார். புதுக் கவிதை மூலம் : ரிஷி மூலம்’, நதி மூலம்’ இவற்றைக் காண்பது எளிதல்ல என்று கூறுவதில் உ ண் ைம உண்டு, ஆனால் புதுக் கவிதையின் மூலத்தை ஒருவாறு ஆறுதியி; டு விடலாம். பாரதியார் தமது எல்லாக் கவிதைகரும் பண்டிருந்து வரும் கவிதைகளினின்றும் சிறிதோ முற்றிலுமோ மாறுபட்ட படைப்புகளாக அமைந்த காரணத்தால் அவற்றைப் "புதுக் கவிதை' (நவகவிதை) என்றே குறிப்பிடு கின்றார். 4. வரும் போகும்-(சி. மணி)