பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 இலக்கிய வகையின் வளர்ச்சியும் "சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது, சொற்புதிது சோதி மிக்க கவக விதை' என்று அவர் தமது கவிதைகளைப்பற்றிக் குறிப்பிடு வதைக் காணலாம். தமது கவிதை உணர்வுகளையும், அகத் தெழுச்சி களையும் கனவுகள், கற்பனைகள், முற்போக்கு எண்ணங்கள், சமுதாயப் பார்வைகள், நாட்டுநிலைகள் ஆகிய அனைத்தையும் மரபுநிலை கெடாத, எளிய இனிய, புதிய புதிய யாப்புகளில், சந்த நயங்கட்கு உட்படும் பல்வேறு. புதிய கவிதை வடிவங்களில் வெளிப்படுத்திய இலக்கண விதிகட்குக் கட்டுப்படாத புதிய வடிவத்திலும் படைக்க முயன்றுள்ளார். எ-டு ‘வசன கவிதை கன்' என்ற பகுதியிலுள்ள காட்சி' என்ற கவிதைத் தொகுப்பு. இதில் உள்ள இரண்டு கவிதைகள்: 1. உடல் நன்று. புலன்கள் மிகவும் இனியன. உயிர் சுவை உடையது மனம் தேன். அறிவுதேன். உணர்வு அமுதம். உணர்வே அமுதம் உணர்வு தெய்வம். 2. எல்லா உயிரும் இன்ப மெய்துக எல்லா உடலும் நோய் தீர்க எல்லா உணர்வும் ஒன்றாதல் உணர்க. 'தான் வாழ்க. அமுதம் எப்போதும் இன்ப மாகுக. இவற்றால் பாரதியாருக்குப் புதுக்கவிதையில் இருந்த பேரவா புலனாகும். இத்தகைய அவாவைக் கொண்ட 5. 7് പൊ ரெட்ட பூபதி-(2)-3