பக்கம்:இலக்கிய வகையின் வளர்ச்சியும் இக்கால இலக்கியங்களும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கால இலக்கியங்களும் 121 கவிஞரே புதுக் கவிதையைத் தோற்றுவித்த தந்தையு மாகின்றார்; முன்னோடியாகவும் திகழ்கின்றார். ஒர் உண்மை : வசனம், செய்யுள் ஆகிய இரண் டிற்கும் அப்பாற்பட்டது கவிதை. வசனமும் செய்யுளும் கவிதை இயங்கும் தளங்களாகும். இவை இரண்டும் கவிதையின் புற வடிவங்கள்; கவிஞர் கை யாளும் ஒருவித சாதனங்கள். இந்த இரண்டு சாதனங் களில் மட்டிலும் கவிதையைக் காண இயலாது. இவற்றைக் கவிஞன் கையாளும் முறையில் தான் கவிதை தென்படும் படைப்புத்திறன் மிக்க கவிஞனுக்குச் செய்யுளிலும் கவிதை கிடைக்கும்; வசனத்திலும் கவிதை கிடைக்கும். இன்று மரபுக் கவிதையாளர்கள் எழுதும் புதுக் கவிதைகளில் இந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். ஊன்றி நோக்குவார்க்கே இது தட்டுப்படும். நாடு உடுத்தியிருந்த நாலு வர்ணத் துணிகளை அவன்தான் தன் பாட்டு நெருப்பில் போட்டுப் பொசுக்கினான்ே இது 'பாரதியார் ஒரு பிள்ளையார் சுழி என்ற கவிஞர் வாலி எழுதிய புதுக்கவிதையில் ஒரு பகுதி: வருணாசிரம தர்மத்தை வெறுத்த பாரதியின் கருத்தைப் பளிச்சிட்டுக் காட்டுவது. வசனம் போன்ற இதில் கவிதை மின்னுவதைக் காணலாம். 6. வாலி : பொய்க்கால் குதிரைகள்-பாரதி ஒரு பிள்ளையார் சுழி.